தேவயானி கலந்து கொண்ட பள்ளிவிழா!

devayani-lmpபிரைம் இந்தியா ஹெல்த் கேர் சொல்யூசன்ஸ் இந்திய சுகாதார சேவையில் பல ஆண்டுகளாக அனுபவமும், ஃபோர்டிஸ் ஹெல்த் கேர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், குளோபல்  ஹாஸ்பிட்டல்ஸ்,அகர்வால் ஐ ஆஸ்பிட்டல்ஸ்  பி எஸ் ஆர் ஐ  போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்ட நிறுவனமாகும்,

பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் உடல்நலம் குறித்த‌  விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரைம் இந்தியா நிறுவனத்தார், சென்னையில் சியோன் குழும பள்ளி மாணவர்களுக்கு  உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினர். அதன்படி மாணவர்கள் மத்தியில் நிலவும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்‌ற அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள், குறைந்த உடற்பயிற்சி ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது, சிறப்பு.மேலும் இந்த நிலையை மாற்ற புதிய ” பிரைம் ஆரோக்யா யுவா” திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது,

சியோன் பள்ளியில் நடைபெற்ற இத்திட்டம் குறித்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை  தேவையானி கலந்து கொண்டு சியோன் குழும பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்,இத்திட்டத்தினை ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன் இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக மேல்நிலைய அதிகாரி டாக்டர்‌ S.P பிரகாஷ் நடிகை தேவையானியுடன் இணைந்து வழங்கினார்,இந்நிகழ்ச்சியில் சியான் ஸ்தாபகரும், முதல்வருமான டாக்டர் விஜயன் வாழ்த்துரை வழங்க,பிரைம் இந்தியா ஹெல்த்கேர் நிறுவன மேலாண்மை‌ இயக்குநர்   வினோத் சர்மா மாணவர்களுக்கான பரிசோதனைகளை துவங்கி வைத்தார்.

devayani1
பிரைம் ஆரோக்யா யுவா திட்டத்தின் மூலம் இதுவரை 65 பள்ளிகளில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாக பயனடைந்துள்ளனர்,இத்திட்டத்தின்படி மாணவர்களை தினமும் கவனித்துகொள்ள செவிலியர் குழு மற்றும் மருத்துவரையும் நியமித்துள்ளதாகவும் ,மேலும் மாணவர்களின் விவரம் அடங்கிய கைரேகை மற்றும் சுகாதார நிலை குறித்து சுகாதார அட்டை மூலம் ஆண்டுதோறும் கணினி வழியாக செய்லபடுத்தப்படும் , மருத்துவ சிகிச்சை  தேவைப்படின் மருத்துவ வல்லுநர்கள் குழுவால் இலவச இரண்டாம் ஆலோசனையும் பரிந்துரைக்கப்படும் ,மேலும் இத்திட்டத்தின் கீழ் 1 லட்ச ரூபாய்  மதிப்பிலான காப்பீடும் வழங்கப்படும் என்பது சிறப்பம்சமாகும்,

பள்ளி மாணவர்களின் உடல்நலனை  பிரதான கொள்கையாக முன்வைக்கும் பிரைம் இந்தியா ஹெல்த்கேர் சொல்யூசன்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1500 பள்ளிகளுக்கு மேல் விரிவான மருத்துவ சுகாதார சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறார்கள்.​