பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா !

jothika7தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.
மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.