‘ புலன் விசாரணை-2’ விமர்சனம்

pv-2-2இந்திய பெருங்கடலில் பெட்ரோல் இருப்பதாக ஒரு குழு கண்டறிந்து ஆய்வு செய்கிறது. எடுக்க திட்டமும் தீட்டப் படுகிறது.அப்படிப்பட்ட  பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப அதிகாரிகள் 15 பேர் குடும்பத்துடன் காஷ்மீர் குலுமணாலிக்கு சுற்றுலா போகும் போது 1000 அடி பெரிய பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விபத்துள்ளாகி அனைவரும் இறந்து விடுகிறார்கள். அந்த பஸ்சை தவறவிட்ட ஒரு பெண் இன்ஜினியர் டெல்லி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ரவுடிகளால் சுடப்படுகிறார்.

எதனால்  இப்படி என்றால் அந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தனக்கு இழப்பு என்று முடிவு செய்கிறார்  எரிவாயு நிறுவன தலைவர். அதனால்தான் டூர் போவதாக வட இந்தியா அனுப்பி அந்தக் குழுவினர் குடும்பத்தினர் போன பஸ்ஸை விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார் அவர் . அந்தப் பஸ்ஸில் போன ஒரு இன்ஜினியரை மட்டும் பிழைக்கவே அவளையும் சுடுகிறார்கள். அவளைக் காப்பாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி அந்த கேசை புலன் விசாரணை செய்கிறார். அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் சபாரத்தினம் அதில் பெரிய அரசியல் தலைவர்களும்  மல்டி மில்லீனியர்களும் சம்பந்தப்படிருப்பதைக்  கண்டுபிடித்து அவர்களை கோர்ட் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தர போராடுகிறார்.குடும்பத்தை  இழந்தும்  தளராமல் அதன் பின்னுள்ள தீய சக்திகளைத்தோண்டித் தோலுரித்து நாட்டுக்குக் காட்டுவதே புலன்விசாரணை 2 கதை.

எந்தக் குற்றத்தின் பின்னணியிலும் உள்ள குற்றவாளிகளைத் தேடும் புலன் விசாரணை என்கிற தொடரில் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இதில் பிரசாந்த்தான் ஐ.பிஎஸ் அதிகாரி சபாரத்தினம். பறந்து  பறந்து சண்டை போடுகிறார். நாயகிகளுடன் கிளு கிளு நடனமாடுகிறார்.

புலன் விசாரணை 1ல் இருந்த நேர்த்தி இதில் குறைவு. சமகாலப் படங்களை செல்வமணி பார்க்க வில்லையோ? பின்னணி படு கொடூர இரைச்சல்.

வெளிநாடு பிரமாண்ட கூட்டம், காட்சி , பிரமாண்டகடல், தீவு, விமானம், ஹெலி ஹாப்டர் என பிரமாண்டமான காட்சிகளில் தன் இருப்பை பதிவு செய்து இருக்கிறார் செல்வமணி. துடிப்பான வசனங்களில் லியாகத் அலிகானும் நிறைகிறார்.

ஆனால் திரைக்கதை நேர்த்தியில் காட்சிகளிள் நம்பகத் தன்மையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் . இருந்தாலும்  சமகால அரசியல் பிரச்சினையை அணுகியுள்ள விதத்தில் இது துணிச்சலான முயற்சிதான்.