‘மோ’ விமர்சனம்

mo4பேய்க்கதை ரசிகர்களை  நம்பி எடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இன்னொரு படம்தான்  ‘மோ’.

‘மோ’ வின் கதை என்ன ?  சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் நண்பர்கள். ஊரை ஏமாற்றும் சீசன்  கோல்மால் வேலைகள் என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும்  பட்டியல் போட்டு செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.  சீசனுக்கேற்றபடி பேய் விரட்டும் தொழிலில் இறங்கத் துணிகிறார்கள். அதற்காகத் திட்டமிடுகிறார்கள்.

ஒரு வீட்டில் பேய் இருப்பதாக நம்ப வைத்து அங்கே போய் பேய் ஓட்டுவதாக பணம் பறிப்பது அவர்கள் திட்டம். இதற்காக பேயாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷும், மேக்கப் மேனாக முனிஷ்காந்தும் அவர்கள் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார்கள்.

திட்டப்படி ஒரு பெரிய அடுக்குமாடி கட்டடத்தில் பேய் இருப்பதாக, அங்கு குடியிருக்கும் அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். பேயை விரட்டுவதாக அந்த கட்டடத்தின் முதலாளியும் ரியல் எஸ்டேட் அதிபருமான செல்வாவிடம் இருந்து பணத்தை கைப்பற்றி விடுகின்றனர் .

இந்நேரத்தில் ஒரு பாழடைந்த பள்ளி விலைக்கு வர, அந்த பள்ளியை வாங்க முயல்கிறார் செல்வா. ஆனால், அதற்கு முன்பே முன்னாள் எம்எல்ஏ மைம் கோபி யும் போட்டிக்கு வாங்க வருகிறார்.

அவர்கள் ஐவரும்  தன்னை ஏமாற்றிப்பணம் பறித்தது செல்வாவுக்கு ஒரு கட்டத்தில் தெரியவருகிறது.  டுபாக்கூர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் .அவர்களைப் போலீஸில் பிடித்து கொடுக்காமல் இருக்கவேண்டுமானால் , அந்த பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பது போல்  நம்பச் செய்து அந்த மைம் கோபியை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று செல்வா கூறுகிறார். போலி எக்ஸார்சிஸ்டுகளும்  ஒப்புக்கொள்கிறார்கள்.

இதற்காக சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா, ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஷ்காந்த் என ஐவரும் அந்த பாழடைந்த பள்ளிக்குச் செல்கின்றனர். தங்கள் வேலைகளைக்காட்டி மைம் கோபியையும் நம்ப வைக்கிறார்கள். ஆனால் பிறகு அவர்கள் அங்கிருக்கும் ‘மோ’விடம் மாட்டிக் கொள்கிறார்கள் .அதாவது ஒரிஜினல் பேயான மோகனவதனி என்ற கணக்கு டீச்சரின் ஆவி ஐஸ்வர்யா ராஜேஷ் உடம்புக்குள் புகுந்து போடும் ஆட்டம் ஆரம்பம். ஆகிறது அனைவரும் மாட்டிக் கொள்கிறார்கள் . அந்த பேயிடம் இருந்து  அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ் பேயாக  அழகாகப் பொருந்தியிருக்கிறார்.  ஜாலியான பேய் பாத்திரத்தை ஏற்று சிரிக்க வைத்திருக்கிறார்.

சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவருக்கும் தங்களது கலகல வேடங்களை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்துஎ ழுப்புதல் கூட்டம் நடத்திடும் காட்சிகளில்  அசலான நடிப்பு ,செமயான சிரிப்பு.

முனிஷ்காந்தின் காமெடி படத்தின் ஹைலைட்.  பேய் வேடத்தில் அவர் பண்ணும் த்ததுப் பித்துத்தனங்கள்   திரையரங்குகளில் சிரிப்பலைகள் அள்ளும்.. யோகிபாபு வந்தாலே போதுமே.இரண்டு காட்சிகள் மட்டுமே வந்து அனைவரையும் விலா நோக வைத்து விடுகிறார் அவர்.மோகனவதனி என்ற கணக்கு டீச்சரின் ஆவி சொல்லும் ப்ளாஷ்பேக் கதையும் கணக்குப்பாடம் நடத்திச்செய்யும் சேட்டையும் சிரிப்பு சரவெடி.

சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையில் பேயாட்டம் மிரள வைக்கிறது. விஷ்ணு ஸ்ரீ கே’யின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஆங்காங்கே வரும் சிறிசிறு லாஜிக் மீறல்களை கண்டு கொள்ளாமல் இருந்தால் பயப்படாமல் சிரிக்கலாம்.

‘மோ’  ‘மோசமில்லை .  காமெடி கலாட்டா.