‘யாக்கை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா: தம்பியை வாழ்த்திய அண்ணன்!

img-32யுவன்ஷங்கர் ராஜா, இயக்குநர் கரு பழனியப்பன், இயக்குநர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர்

வலுவான தமிழ்ச் சொற்களைத்  தலைப்பாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில்  கொஞ்சம் குறைவு தான்.ஆனால் தலைப்புக்கு ஏற்றார் போல் அந்த சில திரைப்படங்களின் கதைக் களம் வலுவானதாக இருக்கும். அப்படி ஒரு தரமான கதையம்சத்தில் உருவாகி இருப்பது தான் இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்து இருக்கும் ‘யாக்கை’ திரைப்படம்.

மனதை வருடும் இசையால் இசைப் பிரியர்களை தன்  பிடியில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா இந்த யாக்கை படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா,  சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர்கள் கரு பழனியப்பன்,  விஷ்ணு வர்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் தேனப்பன், இர்பான், இயக்குநர் பெரோஸ், ஜாஸ் கண்ணன், ‘DIVO’ மியூசிக் ஷாஹிர், நடிகர் சரவணன் ஆகியோரும், தயாரிப்பாளர் ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன், இயக்குநர் குழந்தை வேலப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கிருஷ்ணா சுவாதி, ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன், சிங்கம் புலி, மாரிமுத்து என யாக்கை  படத்தின் படக்குழுவினரும்  கலந்து கொண்டனர்.

“உயிர் உள்ள ஒரு உடலை குறிப்பது தான் ‘யாக்கை’. இத்தகைய வலிமையான தமிழ் சொல்லை தலைப்பாக கொண்டுள்ள யாக்கை படத்தின் கதையும் வலுவானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தன்னுடைய முதல் படத்திலேயே இது போன்ற தனித்துவமான கதைக்களத்தை  தேர்வு செய்த ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்று  கூறினார் கரு பழனியப்பன்.

img-94“ஒவ்வொரு திரைப்படத்திலும்  தன்னை ஒரு தரமான நடிகராக மென்மேலும் உயர்த்தி கொண்டே போகும் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..யாக்கை படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்று உற்சாகமாகக் கூறினார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.

”என் மனதோடு ஒட்டி இருக்கும் ஒரு திரைப்படம் யாக்கை…. எங்களுடைய ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனம் ஆரம்பித்த பிறகு நான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யாக்கை’ என்பதே அதற்கு முக்கிய காரணம்…. இது போன்ற ஒரு உற்சாகமான  இளம் படக்குழுவினருடன் பணியாற்றுவது, எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது…” என்று கூறினார் யாக்கை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.