ராம்சரண் – காஜல் அகர்வால் நடிக்கும் “ ராம்லீலா ”

ramleela1IFAR இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக  RAFI MATHIRA  தயாரிக்கும் படம் “ ராம்லீலா “

தெலுங்கில்  “ கோவிந்துடு அந்தரி வாடு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே ராம்லீலா  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும்   பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  சமீர்ரெட்டி .பரிதி பாடல்களுக்கு  யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

ஸ்டன்ட்  –  பீட்டர்ஹெய்ன்  –  ராம்லக்ஷ்மன்

கலை  –   அசோக்குமார்

இயக்கி இருப்பவர் –  கிருஷ்ணவம்சி

ராம்லீலா படத்திற்கு வசனம் எழுதி இருக்கும்  MRB ஷாஜியிடம் படம் பற்றி கேட்டோம்…

அப்பா பிரகாஷ்ராஜுக்கும் மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளை பேரன் ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான்.

இந்த குடும்பக்கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார்.

விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.