(விக்டிம் )’victim’ விமர்சனம்

உப்பு சப்பு இல்லாத முழுச் சாப்பாடு சாப்பிட்டு சலிப்படைவதை விட கொஞ்சம் கொஞ்சமாக ருசியான பதார்த்தங்களைச் சுவைப்பது நல்ல அனுபவம். அப்படிப்பட்ட ஒரு அனுபவமாகத்தான் விக்டிம் வந்துள்ளது. சுவையான மினி மீல்ஸ் அனுபவத்தைத் தருகிறது இந்த ஆந்தாலஜி படம்.
இந்தத் தொகுப்பில் நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளன.

  1. தம்மம்

பழிவாங்கலை விட உதவுவதே சிறந்த தர்மம் என்று சொல்கிறது பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம். குரு சோமசுந்தரம்,கலையரசன் , லிஜி ஆண்டனி போன்றோர் நடித்துள்ளனர். முழுக்க வெளிப்புற படப்பிடிப்பில் நிகழும் இக்கதை அழுத்தமான காட்சிகள் மூலம் மனதில் பதிகிறது.

  1. Miragge

மனப்பிறழ்வு எப்படிப்பட்ட பிம்பத்தையும் காட்சிகளையும் கற்பனை செய்து கொள்ளும் என்று சொல்கிற திடுக் கதை.இதை ராஜேஷ். எம் இயக்கி உள்ளார்.நட்டி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.இருவருக்கும் நடிப்பில் சம வாய்ப்பு.

  1. கொட்ட பாக்கு வத்தலும் மொட்டமாடி சித்தரும்

நடப்பு அரசியலையும் சமூகச் சூழலையும் பகடி செய்யும் சாமியார் பாணிக் கதை.நடப்பு நாட்டு சூழ்நிலைகளைக் கேலி செய்வது நல்ல நகைச்சுவை.நடிகர் நாசரும் தம்பி ராமையாவும் நடிப்பில் போட்டி போட்டு கலக்குகிறார்கள். சிம்பு தேவன் இயக்கி உள்ளார்.

  1. Confession

மரணத்தின் அருகில் நிற்கும் தருணத்தில் ஒருத்தி அளிக்கும் அதிர்ச்சி வாக்குமூலம் தான் இந்தக் கதை.அமலா பால் பிரதான வேடமேற்றுள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.அமலாபால் தன் நடிப்பின் புதிய உயரங்களைத் தொட்டுள்ளார்.

victim என்றால் பாதிக்கப்பட்டவர் என்று பொருள் .ஆனால் இந்த நான்கு படங்களிலும் பாதிக்கப்பட்டவர் இவர் ஒருவர் மட்டும்தானா? என்று எழும் கேள்வி மையச்சரடாக நான்கு படங்களையும் இணைக்கிறது.

நான்கு படங்களிலும் விதியின் விளையாட்டை அழுத்தமான காட்சிகளாலும் சுவாரசியமான முடிச்சுகளாலும் காட்டியுள்ளனர். எழுதிச் செல்லும் விதியின் கைகளின் சூட்சுத்தின் வலிமை அறியாத இந்த உலகத்தில் இந்த ஆந்தாலஜி படம் தரும் சுவாரசிய ஆட்டம் ரசிக்கத்தக்க வகையில் தான் இருக்கிறது .