ஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை !

homecare1ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோம்கேர்+ இணை நிறுவனர்கள் அனிருத் பிரபாகரன், உதய் சங்கர் மற்றும் வெங்கட்ராமன் பாலாஜி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நர்ஸ் உதவி, பிசியோதெரபி மற்றும் உதவியாளர் சேவைகள் ஆகியவற்றை இல்லம் தேடி வந்து வழங்கும் நலச்சேவை வேகமான வளரும் துறையாக இருக்கிறது. இத்தகைய சேவையை ஹோம்கேர்+ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மூலம் வழங்குகிறது. ஹோம்கேர்+ வாடிக்கையாளர்களுக்கு தகுதி வாய்ந்த தரமான சேவை அளிப்பவர்களை தொடர்பு கொள்வதற்கான மேடையாக இருக்கிறது. எனவே அவர்கள் தனிப்பட்ட அளவில் சேவையாளர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவையில்லை. ஹோம்கேர்+ தகுதி வாய்ந்த, பயிற்சி பெற்ற சேவையாளர்களை தேர்வு செய்து, சிறந்த தொழில்முறைத்தன்மைக்கு உறுதி அளிக்கிறது.

homeஇந்த அறிமுக நிகழ்ச்சியின் போது, லைப்லைன் மருத்துவமனை டாக்டர்.ஜே.எஸ்.ராஜ்குமாருக்கு மருத்துவத்துறையில் முன்னோடியாக இருப்பது மற்றும் மருத்துவ சிகிச்சையில் தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவருவதில் முனைப்பு காட்டுவதையும் பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அனிருத் பேசும் போது, “இந்திய மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் முதியோர் நலம் முக்கியத்துவம் பெறுகிறது. இல்லத்திலேயே பிரத்யேகமான மருத்துவ சேவை தேவைப்படும் நோயாளிகளை மனதில் கொண்டு, பாலாஜி, உதய் மற்றும் நான் ஹோம்கேர் + சேவையை துவக்கியுள்ளோம்.இன்றைய பரபரப்பான உலகில் இத்தகைய முதியோரின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும், தொழில்நுட்ப இடைமுகம் தேவைப்படுகிறது” என கூறினார்.

நிறுவனர் உதய் பேசும் போது, நன்கு பயிற்சி பெற்ற சேவையாளர்களை கொண்டு பல மாதங்களாக இந்த சேவையை பரிசோதனை செய்து வந்துள்ளோம். சேவை அளிப்பவர்கள் அல்லது நர்ஸ்களுக்கு இணையதளம் அல்லது மொபைல் மூலம் மருத்துவர்கள் வழிகாட்டும் வசதி இருப்பது மேலும் சிறந்த விஷயம்” என்று கூறினார்.”

நிறுவனர்களில் ஒருவரான பாலாஜி, “சோதனை முயற்சிக்குப்பிற்கு ஹோம்கேர்+ இப்போது அறிமுகமாகிறது. இந்த சேவையை www.homecareplus.in மூலம் அல்லது மொபைல் செயலி மூலம் அணுகலாம். எங்கள் நிறுவன பெயரில் உள்ள + குறியீடு மூலம் இல்லம் தேடி வரும் சேவையை விட கூடுதலாக அளிப்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் நம்பிக்கை அளிக்கிறோம்” என்று கூறினார்.

இந்த மேடையில் இணைய விரும்பும் சேவையாளர்கள் அல்லது நர்ஸ்கள் தொடர்பு கொள்ளலாம்: +91 7333 893 9497 ,இமெயில் orders@homecareplus.in.

நர்ஸ்கள், அல்லது மருத்துவர்கள் உடனடியாக நோயாளிகள் பின்னணியை புரிந்து கொள்ள வசதியாக நோயாளிகள் தகவல்கள் டிஜிட்டல்  மயமாக்கப்பட உள்ளன.