அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி:நடிகை ரவீனா ரவி!

பின்னணிக்குரல் கலைஞராக இருந்து நடிகையாக வளர்ந்திருக்கும் ரவீனா ரவி திரைத்துறைக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம் ,இந்த செப்டம்பர் 2022திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கலைஞராக என் பத்து வருடங்கள் நிறைவடைகிறது…
இந்த திரைப் பயணத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன்..

கடவுளுக்கு என் முதற்கண் நன்றி

சிறுவயதுமுதல் இன்று வரை எல்லா படிகளிலும் எனக்கு துணை நிற்கும் பெற்றோரின் அளவுகடந்த அன்பிற்கு நன்றி…என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என் தந்தை இன்று என்னோடு இல்லை…ஆனால் என்மீது எல்லையற்ற பெருமிதம் கொள்வார் என நம்புகிறேன்..

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள்…என் அம்மாவே என் குரு , ஸ்ரீஜா ரவி அவர்கள்..இன்று வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்ததுடன் , ஐந்து மாநில விருதுகள் பெற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையிலிருக்கிறார்..
என் உயிர், என் உலகம் எல்லாமே என் பெற்றோர் ரவீந்திரநாதன் மற்றும் ஸ்ரீஜா ரவி அவர்கள் தான்..

என் நண்பர்கள் , என் உற்றார் உறவினர்கள் , என் மீது அன்புள்ளம் கொண்டு துணைநிற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…இது தொடரும் என நம்புகிறேன்..

இதுவரை 104 இயக்குநர்களிடம் நான் பணிபுரிந்திருக்கிறேன்…அவர்கள் அத்தனை பேரும் ஒரு கலைஞராக என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறார்கள்…

நான் பணியாற்றிய அனைத்து தயாப்பாளர்களுக்கும் , உதவி இயக்குனர்களுக்கும் , ஒலிப்பதிவு கலைஞர்களுக்கும் , ஒலிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்…என் பயணத்தில் அவர்கள் பங்களிப்பு ஈடுஇணையற்றது…

இந்த நன்றி மடல் நான் குரல் கொடுத்த கதாநாயகிகளுக்கு நன்றி கூறாமல் நிறைவடையாது…வெள்ளிதிரையில் அவர்கள் குரலாக ஒலிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை…

ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பு வரும்பொழுதும் அதை எனக்கு தெரியப்படுத்தும் பின்னணி குரல் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இரண்டு வயதில் தொடங்கிய இந்த பயணத்தின் மிகப்பெரிய தூண்
“SICTADAU” சங்கம்

ஊடக நண்பர்கள் அளித்த தொடர் ஆதரவு ஒரு நடிகையாகவும் நான் வெள்ளித்திரையில் தோன்ற உறுதுணையாக நின்றது..

அதோடு சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி…உங்கள் பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை மெருகேற்றிக்கொள்ள துணை நிற்கிறது…
நன்றி நன்றி நன்றி நெஞ்சார்ந்த நன்றி

பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி…என் மனதிற்கு நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உங்கள் ஆதரவே முக்கியமான காரணம்…எனக்கு மட்டுமில்லை செய்யும் தொழிலிற்கு உண்மையாக இருந்தால் எல்லோருக்கும் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீரும்…

இப்படிக்கு
ரவீனா ரவி