‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி

asna1தான் நடித்த ‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி ஆஷ்னா சவேரி  கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதுகிறேன்.” எனக் கூறினார் ஆஷ்னா.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , இனிமே இப்படித்தான் ஆகிய  படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பற்றிக் கூறுகையில் “ ஒரு நடிகருடன் மீண்டும் மீண்டும் இணைந்து நடிப்பது இயல்பான விஷயம்.சந்தானம் போன்ற நல்ல நடிக்கக் கூடிய , நகைச்சுவை உணர்வுமிக்க ஒருவருடன் பணிபுரிவதற்கு எந்த கதாநாயகியும் எளிதில் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம்தான். ” எனக் கூறினார்.

“ குடும்பத்துடன் அனைவரும் கண்டுக் களிக்கக்கூடிய படம் என்பதால் ‘ரெட் ஜியன்ட் மூவீஸ்’ போன்ற பெரிய நிறுவனத்தின் உதவி இன்றியமையாததாய் அமைந்தது. படத்தை வெவ்வேறு இடங்களுக்கு இட்டு சென்ற அவர்களுக்கும் எனது நன்றிகள்” எனக் குறிப்பிட்டார் இளம் நாயகி ஆஷ்னா சவேரி.