ஈரானிய இயக்குநர் மஜித்மஜிதியின் இயக்கத்தில் நடிக்கும் தென்னிந்திய நடிகை!

saratha-iranஉலகப்புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித்மஜிதி, இந்தியாவைப் பின்புலமாகக்கொண்டு உருவாகி வரும்  “பியாண்ட் த கிளவுட்ஸ்” (Beyond The Clouds) படத்தில் தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகை ஜி.வி. சாரதா முக்கியவேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும் ஐகேண்டிஃபிலிம்ஸ் (Eyecandy Films) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, இந்தியத் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது, உலகளவில்க ண்டு ரசிக்கும் வகையில்,அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் மஜித்மஜிதி.

கர்நாடக மாநில நாடக உலகில் கோலோச்சிய மறைந்தகுப்பி வீரண்ணாவின் வாரிசான சாரதா, ஏராளமான நாடகங்களில் நடித்ததுடன், சுமார் 60 திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்ஆவார். பல பக்க வசனங்களை அனாயாசமாகப் பேசவும், உணர்வுபூர்வமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தவும் வல்லவரான சாரதா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் ஜும்ப்பா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து பேசியசாரதாஅவர்கள், 15 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகுமீண்டும் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதுவும், தான் “திரையுலககடவுள்” போன்றுதான் கருதும் மஜித்மஜிதி படத்திலேயே நடிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பன்முக திறமை கொண்ட மஜித்மஜிதியின் தேர்ந்த படக்குழுவினருடனும், தயாரிப்பு நிறுவனங்களானஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும்ஐகேண்டிஃபிலிம்ஸ் (EyecandyFilms)இணைந்து பணியாற்ற இருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும்தெரிவித்துள்ளார்.

சாரதா மீண்டும் நடிப்புலகிற்குத் திரும்பியதுகுறித்துபேசிய, ஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும்ஐகேண்டிஃபிலிம்ஸ் (Eyecandy Films)நிறுவனத்தின் அதிகாரபூர்வதகவல்தொடர்பாளர்கள், இப்படத்தில் சாரதா அவர்களை நடிக்கவைக்க முடிவுசெய்யப்பட்டாலும், மற்றநடிகர் நடிகைகளைப் போல் அவருக்கும்ஸ்க்ரீன்டெஸ்ட், நேர்முகதேர்வு உள்ளிட்டபலகட்டங்களைகடந்தபிறகே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது நடிப்புத்திறன் இப்படத்திற்குமேலும்சிறப்புசேர்ப்பதாகஅமையும்என்றும்அவர்கள்மகிழ்வுடன்தெரிவித்தனர். இப்படத்திற்காக நடிகைசாரதாஅவர்களை உடல்எடையைகுறைக்குமாறு இயக்குநர்மஜித்மஜிதிஅவர்கள்கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அவரும்அதற்குசம்மதம் தெரிவித்ததாகவும் தயாரிப்பு நிறுவன தகவல்தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.