மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி: சினிமா விழாவில் மன்சூர் அலிகான் தாக்கு!

mansoor2மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி என்று சினிமா விழாவில் மன்சூர் அலிகான்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

உதய சங்கர் இயக்கத்தில் மிமோசோ புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம் ‘ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன் பாடல்களை வெளியிட்டனர். இயக்குநர்  சீனு ராமசாமி , நடிகர் ரகுமான் மற்றும் படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் மன்சூர் அலிகான் பேசும் போது படக்குழுவினரை வாழ்த்தி விட்டு நாட்டு நடப்புக்கு வந்தார். “இன்றைக்கு என்ன நடக்கிறது நாட்டில்? நூறு ரூபாய் பிச்சை போட்ட மக்கள்  இன்று நூறு ரூபாய்க்காகப் பிச்சை எடுக்கிறார்கள். மக்களை மோடி பிச்சைக்காரர்களாக்கி விட்டார். எல்லாத் தொழிலும் நடக்கவில்லை .மக்கள் அல்லாடுகிறார்கள்.இந்த சில நாட்களாக எல்லாம் அழிந்து வருகிறது. மக்கள் செத்து சுண்ணாம்பு ஆகிறார்கள். விவசாயிகள் கதறுகிறார்கள்.சினிமா தியேட்டர்களில் படம் ஓடவில்லை. சினிமாவுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு திட்டமும் இல்லாமல் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் மோடி இப்படிச் செய்தது நியாயமில்லை. எந்த பணக்காரன் நோட்டை மாற்ற கியூவில் நிற்கிறான்.ஏழைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். கறுப்பு பணம் உள்ளவன் எல்லாம் எப்போதோ டாலராக மாற்றிவிட்டான்.   எல்லா இழப்புக்கும் மோடிதான் நஷ்ட ஈடு தரவேண்டும். இதைச் சொல்ல எனக்கு ஒரு குடிமகனாக உரிமை இருக்கிறது.  ” இவ்வாறு மன்சூர் அலிகான் பேசினார்.konjam1