இந்தியாவிலேயே முதல் முறையாக Photo Realistic AI தொழில்நுட்பம் மூலம் “அவிரா ” முழுநீள திரைப்படம் உருவாகியுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் ஏராளமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் AI என்ற (Artificial intelligence ) தற்போது உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே, திரைப்படம் துறையிலும் AI தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்க துவங்கியுள்ளது.
அந்த வகையில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் ” அவிரா ”
சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியவர் பிரபாகரன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏஐ
தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் முழு நீளப்படத்தையும் தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்ற பெருமை இயக்குநர் பிரபாகரனையே சேரும். இதன் தயாரிப்பாளர்களாக கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் பிரபாகரன் பகிர்ந்தவை….
”அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள்.புராண காலத்துக் கதையை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதையாக வரும் இந்தப் படத்தை ஃபான் இந்தியா திரைப்படமாகத் தயாரித்திருக்கிறேன்.
Photo realistic Ai Technology கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் பேண்டஸி திரைப்படமாக உருவாக்கியுள்ளேன். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.”


