‘வேலு தம்பி’ என்ற வரலாற்று பான் இந்தியா தொடரில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.!

ஆங்கிலேய அரசை ஒடுக்கும் துணிச்சலான செயல்களுக்குப் பெயர் போன வேலு தம்பி வேடத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடித்து உள்ளார்.
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், கான்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இந்தியாவின் புகழப்படாத
நாயகர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் காண்பிக்கும் ‘ஸ்வராஜ்’ என்ற மாபெரும் படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த தொடர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விரைவில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம் போன்ற அனைத்து மொழிகளிலும் விரைவில் பிரபலமான ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் சிறப்புக் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுடன் அண்மையில் பார்வையிட்டார்.

இந்த தொடரில் நடிப்பது பற்றி கணேஷ் கூறுகையில், ஒரு நடிகராக, இந்திய வரலாற்றில் இருந்து ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஒரு துணிச்சலான இதயம், ஒரு போர்வீரன் என்று நடித்த அனுபவம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது. “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பான் இந்தியா படமும் உருவாக்குவாதற்கான சாத்திய கூறுகள் இந்தியாவிலேயே உள்ளது. மொழி மற்றும் கலாச்சார தடைகளை மெதுவாக உடைத்து வரும் ஓடிடி-க்கு நன்றி. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கவும், தங்களைப் பரிசோதித்து கொள்ளவும், வெவ்வேறு மொழிகளில் பணியாற்றவும் விரும்பும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம். நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் சொல்லப்படாத வீரம் பற்றிய பல கதைகள் உள்ளன. அதை இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றை சித்தரிக்கும் முக்கியமான படைப்பாக இருப்பதால், அதைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். அதேபோல் வேலு தம்பி நான் மட்டுமே படித்த ஒரு கதாபாத்திரம் & இந்த கதைகளைத் திரையில் பார்ப்பது பார்வையாளர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

மேலும் சபரி என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பன்மொழி படமாக ‘சபரி’ வெளிவருகிறது.

இதை தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.