35 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ள முதல் தமிழ்ப்படம் ‘சதுரம்-2’

Sathuram 2நாக் அவுட் எண்டர்டெய்ன்மெண்ட், க்ரே மேட்டர் ஸ்டுடியோஸ் ,பரஞ்ஜோதி புரொடக்ஷன்ஸ்  இணைந்து Sathuram 2தயாரித்துள்ள படம் ‘சதுரம்-2’

இது ஓரு சஸ்பென்ஸ் த்ரில்லர். பொதுவாக த்ரில்லர் என்றால் தனிமனித விரோதம் பழிவாங்கல் என்றிருக்கும். இதில் சமூகக்  காரணத்துக்காக வருகிற  தனி மனிதகோபம் இருக்கும் .அதனால்தான் இந்தியாவில் முதல்” PHILANTHROPICAL THRILLER “என்று விளம்பரப் படுத்தியுள்ளார்கள்.

‘சதுரம்–2’ படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுப்பிரமணிய சிவாவின் மாணவர்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்.கே வி ஸ்டுடியோவில்  நடைபெற்றது. இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ராஜேஷ். எம்,  ‘மூடர் கூடம் ‘நவீன் ,’சேதுபதி’ சு.அருண்குமார் ‘அம்புலி’ ஹரி சங்கர்– ஹரீஷ்நாராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.

ஏற்கெனவே’சதுரம்-2′ படத்தை இந்த இயக்குநர்கள் பார்த்து விட்டதால் படத்தை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினர்.

இப்படத்தை ‘க்ரௌடு பண்ட்’ முறையில் 35 பேர் நண்பர்கள்  இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படி 35 பேர் தயாரிப்பாளர்களாகி   ஒரு படத்தை எடுத்துள்ளது தமிழில் இதுவே முதல் முயற்சி எனலாம்.

‘சதுரம்-2’ படம் பற்றி இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறும் போது ” இது ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்திய  ‘SAW ‘ படத்தின் ரீமேக் ஆகும் . இது திரைக்கதையிலும் தொழில்நுட்ப ரீதியிலும் பேசப்படும் படமாக இருக்கும் ” என்றார்.

சென்னை, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘அம்புலி’ 3டி’ படத்தில் பணிபுரிந்த சதீஷ்தான் ஒளிப்பதிவாளர் , இசை– கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இவர் ‘மெரினா’ ‘விடியும் முன்’ படங்களின் இசை அமைப்பாளர். எடிட்டிங் ராஜாசேதுபதி. இவர் ‘சதுரங்க வேட்டை’யில் பணிபுரிந்தவர். இப்படி ஆற்றலும் அனுபவமும் உள்ள  இளைஞர்களால்  உருவாகியுள்ள இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.