‘கோல்ட் கால்’ (COLD CALL) திரைப்பட விமர்சனம்

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி நடித்துள்ளனர்.

தம்பிதுரை எழுதி இயக்கி உள்ளார் .சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிரணவ் கிரிதரன் இசையமைத்துள்ளார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். வாக் த்ரோ என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கேசவ மூர்த்தி  தயாரித்துள்ளார்.

முன் அனுமதி   இல்லாமல் எதிர்பாராத நேரத்தில் தானாக போன் செய்துவாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரம் செய்யும் அழைப்பை மார்க்கெட்டிங் துறையில் ‘கோல்டு கால்’ என்கிறார்கள்.இப்படத்தின் கதை விற்பனையாளர்கள் வாழ்க்கை சார்ந்தது என்பதால், இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

விற்பனைப் பணிகள் அதாவது மார்க்கெட்டிங் என்றால் அலைச்சல் உள்ள தொழிலாகப் பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டிங் துறை  என்பது ஓர் உலகம். அப்படிப்பட்ட உலகத்தில் பணியாற்றும் இளைஞர்களைப் பற்றிய, குறிப்பாக நான்கு பேரைப் பற்றிய கதை இது.
பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர்களாக சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய
 நான்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நான்கு பேரும் வெவ்வேறு மாநிலம் ,வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள்.இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது.நண்பர்களாக இருக்கிறார்கள்.விற்பனையாளர் பணி கடினமானது என்றாலும் அவர்கள் அதை மகிழ்ச்சியாகச் செய்துவருகிறார்கள்.இருந்தாலும் நிர்வாகம் எதிர்பார்க்கும் செயல்பாடுகள் இல்லாமல் பெரிய உயரம் தொடாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் நிர்வாகத்தினரால் விமர்சிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்கள் மீது ஒரு கடத்தல் பழி வந்து சேர்கிறது.தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்பட, இவர்கள் மீது போலீஸ் சந்தேகப் பட்டுத்தேடுகிறது. பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக, தங்களது சாதுர்யத்தால்  தங்கள் மீது விழுந்த பழியைப் போக்கிடவும், கடத்தப்பட்ட சிறுவனைக் காப்பாற்றவும் முடிவு செய்கிறார்கள்.அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா ? இல்லையா ? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்வது தான் ‘கோல்ட் கால்’ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் தமிழுக்குப் புதியவர்கள் . ஆனாலும் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா என்று நான்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான் கதையின் நாயகர்கள் என்பதால்  சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களாகவே தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நான்கு பேரும் நான்கு விதமாக நான்கு மனப்போக்கு கொண்டவர்களாக இருந்தாலும் நட்பில் இணைந்து இந்தக் கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகிகளாக வரும் அமிதா ரங்கநாதன், நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும்  தங்களது இளம் தோற்றத்தின் மூலமும் சுமாரான நடிப்பின் மூலமும் தங்கள் பாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.
நிறுவனத்தின் மேலாளர், விற்ப்னையாளர்களின் பயிற்சியாளர் என்று பிற பாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் தேர்வுக்கு நியாயம் செய்துள்ளார்கள் .
மிகச்சில கதை நிகழ்வு இடங்களிலேயே படத்தின் நகர்ந்தாலும் அது தெரியாமல் சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது.
பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் வணிக நோக்கில் உருவாகியுள்ளன.
இந்தக் கதைக்கு ஏற்ற வகையில் சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு உள்ளது. குறையில்லை.
எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை, விற்பனையாளர்கள் பணியின் சிரமங்களையும் சுமைகளையும் கூறாமல் அந்தப் பின்னணியில் ஒரு கதையை அமைத்துள்ளார்.குறைவான படப்பிடிப்பு நாட்கள் ,வரையறுக்கப்பட்ட செலவுத்திட்டம் போன்றவற்றுக்குள் ஒரு நிறைவான படத்தை கொடுத்திட முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில், ‘கோல்ட் கால்’ நோ டென்ஷன் பி கூல் ரகப்படம்  என்கிற வகையில் ஒரு பொழுதுபோக்குப் படம்.