ஜனனி , விஷாகன், கௌஷிக், ஹரி விஜய்,ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், கலைமாமணி சிவன் சீனிவாசன், திலீபன், பாய்ஸ் ராஜன்,யுவஸ்ரீ சண்முகம், தீபிகா, காவ்யா அமிரா, அறந்தாங்கி மஞ்சுளா, பத்மினி, எஸ்.கே.குரு, ஜி.விக்னேஷ், ஆரஞ்சு மிட்டாய் பிரபாகரன், ராஜகுமாரி நடித்துள்ளனர்.
ஏ. கே. குமார் இயக்கியுள்ளார்.மோகன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.எம். அபுபக்கர் இசை அமைத்துள்ளார்.
படத்தொகுப்பு: தினேஷ்,டி ஐ: ஜியாவுதீன். ஏகே மூவிஸ் தயாரித்துள்ளது
ரமேஷ் கண்ணாவுக்கு இரு மகள்கள் . அவர்கள் ரம்யா மற்றும் சரண்யா என்ற இரட்டையர்.நடுத்தர வர்க்க குடும்பம் , எளிமையான வாழ்க்கை என்று வாழ்கிறார்கள்.
இரட்டைச் சகோதரிகளின் தோழி லட்சுமி. அவள் ஒரு நாள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள்.அந்தக் கொலையின் பின்னணியில் பணக்காரத் திமிர் பிடித்த வாலிபர்கள் இருக்கிறார்கள்.இந்தக் கொடூரக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியாக ரம்யா இருக்கிறாள்.அதை அறிந்த அந்தக் கொலைகாரக் கும்பல் ரம்யாவைத் துரத்துகிறது.ரம்யா மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிர் பிழைக்கிறாள். இந்த அநீதிக்கும், தோழியின் மரணத்திற்கும் சட்டத்தை நம்பக் கூடாது என்று குற்றவாளிகளைத் தேடித் தேடி வேட்டையாடத் துணிகிறாள். இதற்கு சரண்யாவின் போலீஸ் காதலன் ரகு உதவுகிறான். தன் விருப்பத்தில் இவ்வழக்கை எடுத்து விசாரிக்கிறான். தனது காதலி தான் இந்தத் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கிறாள் என்பது புரிகிறது. செய்வதறியாமல் தவிக்கிறான். காதலா? சட்டமா? என்று ரகு தவிக்கிறான். முடிவு என்ன?என்பதுதான் 101 நிமிடங்கள் கொண்ட ‘நிழல்’ படத்தின் மீதிக்கதை.
நடிகை ஜனனி இப்படத்தில் ரம்யா, சரண்யா என இரட்டை வேடங்கள் ஏற்றுள்ளார். பயந்த சுபாவி ரம்யாவாகவும், துணிச்சலான சரண்யாவாகவும் இரண்டு வெவ்வேறு கதாபாத்திர உடல் மொழியிலும், மாறுபாடு காட்டி நடித்துள்ளார்.
காவல் ஆய்வாளராக விஷாகன் கடமை வீரராகக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.
கௌஷிக், ஹரி விஜய், ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், கலைமாமணி சிவன் சீனிவாசன், திலீபன், பாய்ஸ் ராஜன்,யுவஸ்ரீ சண்முகம், தீபிகா, காவ்யா அமிரா, அறந்தாங்கி மஞ்சுளா, பத்மினி, எஸ்.கே.குரு, ஜி.விக்னேஷ், ஆரஞ்சு மிட்டாய் பிரபாகரன், ராஜகுமாரி ஆகியோர் கதையின் போக்கிற்கு தங்கள் நடிப்பால் உதவி உள்ளனர்.
இசையமைப்பாளர் எம்.அபுபக்கர் அமைத்துள்ள பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் மோகன்குமார் மூலம் இருள், ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளும் குறிப்பாக சண்டைக் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன.
அழுத்தமான ஒரு கிரைம் திரில்லரை எடுத்துக் கொண்டு படமாக்கியுள்ள இயக்குநர் ஏ.கே.குமார் ,இரட்டைச் சகோதரிகளின் பாசப் பிணைப்பையும் காட்டியுள்ளார்.இன்றைய சமூகத்தின் அவலத்தையும் கொடூரத்தையும் உரிய காட்சிகளின் மூலம் வைத்துள்ளார்.
மொத்தத்தில் ‘நிழல்’ திரைப்படம் சமூகத்தில் நிகழும் அநீதிக்கு எதிரான ஆவேச வேட்டை எனலாம்.


