இயற்கையை நேசிக்க வேண்டும் : நடிகர் சூர்யா நாட்டுக்கு அறிவுரை!

suri2.1அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் “ யாதும் ஊரே” என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது. இதில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர்  ராம் , புதிய தலைமுறை தொலைக்காட்சி  நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சத்ய நாராயணா , அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா ,ராம சுப்ரமணியம் , தமிழருவி மணியன், தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் , நடிகர் பார்த்திபன் , நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நந்தா , A.L.உதயா ,அருமைச்சந்திரன் ஆகியோர் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டனர்.

agaram-2.1 அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா பேசியபோது ”இயற்கை என்பது ஒன்றை ஒன்று சார்ந்தது , மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழலாம் ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியாது என்பது தான் உண்மை. பறவைகள் இல்லாவிட்டால் பூச்சிகள் இனம் மனித இனத்தை நிச்சயம் அழித்தே இருக்கும். பறவைகள் இருப்பதனால் தான் பூச்சிகளை உண்டு நம்மை காப்பற்றி வருகிறது. தமிழ் மக்களாகிய நாம் தொன்று தொட்டு இயற்கையைப் போற்றி , மதித்து , வணங்கி வருகிறோம்.  அப்படிபட்ட நாம் இயற்கையை நேசிக்காமல் போனதால் தான் இதை போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். ”யாதும் ஊரே”என்பது ஒரே ஒரு மனிதரின் முகம் அல்ல இது நிவாரண பணியில் ஈடுபட்ட பல்வேறு மக்கள் மற்றும் இளைஞர்களின் முகம் ”என்றார் சூர்யா.