25 லட்சம் சம்பளம் வாங்குற நீதான் டூப். 750 சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ -சத்யராஜை அதிர வைத்த இயக்குநர்

R Sundarrajan, RV Udayakumar in Kelmbitangaya Kelambitangaya Tamil Movie Stillsசர்ச்சை இயக்குநர் சாமி இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேறறு மாலை நடைபெற்றது.

முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் போது. “இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நாலு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது.

இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள்  கிடைத்தன.ஒரு கசப்பான அனுபவம் ,இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில்  3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்க வில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? ” என்று குமுறினார்.

சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இயக்குநர்ஆர்.சுந்தர்ராஜன் பேசினார். அவர் பேசும்போது,

“இது மாதிரி முன்பும் நடந்துள்ளன.’திருமதி பழனிச்சாமி’ படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி  உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி.அவுட்டோரில்  எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம் அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் சொன்னார்.. ‘டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல’ என்றார். ‘உனக்காக நடித்தவன் அவன் .குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ என்றேன்.இதுதான் சினிமா.

ஒரு முறை இளையராஜா ஏழுபாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் ஏழு பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும்  தன் படத்தில் நாலு சீக் வென்ஸ்தான்  உள்ளன. நாலு பாடல்களே போதும் என்று கேட்டார்கள். அவர் கொடுக்க மறுத்தார்.

ஒரு இசையமைப்பாளர் இளையராஜா உனக்கே  இவ்வளவு திமிர் இருந்தால் எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் அப்படி என்ன பாட்டு போட்டு வைத்திருக்கிறாய் என்று நினைத்து  போனேன்.போய் கேட்டேன்.. நானே  அந்த ஏழையும் வாங்கினேன்.  பயன் படுத்தினேன்.அந்தப் படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ .இது வித்தைதிமிர்.அது போல தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும் .தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால் ஒற்றுமை இல்லா விட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். காப்பாற்ற முடியாது”என்றார்.

விழாவில் ‘கங்காரு’ படத்தின்   இயக்குநர் சாமி,  இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,  கே.எஸ். அதியமான்,ஜெகன்,வேல்முருகன், கேபிள்சங்கர்,மனோஜ்குமார், வி.சேகர்,நாயகன் அர்ஜுனா, நாயகி பிரியங்கா, கோமல் சர்மா,தம்பிராமையா,  வெற்றிக் குமரன்,எடிட்டர் மணி,தயாரிப்பாளர்கள்   கலைப்புலி தாணு, டி.சிவா, பி.எல். தேனப்பன்,  , கரு. நாகராஜன். ராதா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்னம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.