எங்கே அரித்தாலும் சொறியத்தான் வேண்டும் : கலாய்த்த கப்பல் இயக்குநர்

IMG_2298அண்மையில் வெளியான படங்களில் சர்ச்சைகள் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ‘கப்பல்’ வணிக வசூல் அளவில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறதாம். அந்த மகிழ்ச்சியை ஊடகங்களிடம்’கப்பல்’ படக்குழு இன்று பகிர்ந்து கொண்டது.

நிகழ்ச்சியில் கார்த்திக் ஜி.கிரிஷ், ரோபோசங்கர், வைபவ், சோனம் பாஜ்வா, உள்பட கப்பல் பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் கூறியவற்றிலிருந்து பெறப்பட்டவை…!

“சினிமா அனுபவம் இல்லாமல் வந்தோம். இயக்குநர் சொன்ன கதை பிடித் திருந்தது. வெகுஜனம் போலவே கதை கேட்டோம்.அனுபவித்து சிரித்தோம். சொன்னபடி எடுத்தார்.  சினிமா ஒரு கூட்டு முயற்சிதான். படம் பார்த்து நல்ல ஊக்கமான விமர்சனமும் வந்தது.தவறைச் சுட்டிக்காட்டியும் வந்தன. “என்றார் , தயாரிப்பாளர்.

”படம் சூப்பர் ஹிட்டை நோக்கிப் போகிறது. மேலும் உங்கள் ஆதரவு தேவை.”என்றார்  ஒருவர்.

”இன்று பார்வையாளர்களை ஏமாற்றிடமுடியாது. படம் பார்த்த பத்தாவது நிமிஷத்தில் பேஸ்புக், ட்விட்டர் என்று விமர்சனம் பறந்து விடும்” என்றார்   இன்னொருவர்..

”என்னை ஜட்டி யோடு ஓடவைத்தற்கு நன்றி. நான் ஓடியதை வெறுக்கவில்லை ரசித்தார்கள். நன்றி மக்களே.”என்றார் ஒரு புது நடிகர்.
”என்னை புதுமுகமாக நடத்தவில்லை. சம மரியாதை கொடுத்தார்கள்” இது ஒரு நடிகர்.

”இது எனக்கு மறக்க முடியாது .நல்ல அனுபவம் ரசித்து நடித்தேன். அர்ஜுனன், கருணாகரன், விடிவி கணேஷ் ஆகியோர் என்னை. சிரிக்க வைத்தனர்.”இது நாயகி சோனம் பாஜ்வா,.

”மீடியா ஆதரவு இல்லை என்றால் இந்த வெற்றியை ருசித்திருக்க முடியாது” இது ஒருவர்.

”இன்று அவசரயுகம் கார்ப்பரேட் யுகம். யாருமே சிரிக்கிறது இல்லை. எனவேதான் இந்தப்படம் ஓடுகிறது” இது மற்றொருவர்.

இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் ஊடகக்  கேள்விகளுக்கு பதில்களாக கூறியவை:
”சென்சாரில் இந்தப் படத்தில் சில காட்சிகளை வெட்டினால்  சில காட்சிகளை மியூட் செய்தால் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும்.இல்லையேல் யூஏ என்றார்கள். அதன்படி கட், மியூட் செய்தோம். ‘யூ’ சான்றிதழ் கிடைத்து விட்டது.

ஷங்கர் இயக்கியதில் எனககுப் பிடித்த படம் ‘இந்தியன்’ தான்.

‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடல் முறைப்படி அனுமதி பெற்றே கப்பல் படத்தில் பயன்படுத்தப்பட்டு ள்ளது.

படத்தில் வரும் காஞ்சூறு இலை காமடி கிராமத்தில் அடிக்கடி நடப்பதுதான் எங்கே அரித்தாலும் சொறியத்தான்  செய்ய வேண்டும்.

இது ஷங்கர்சார் வெளியிட்ட படம்தான். வியாபாரத்துக்காக அவர் பெயர் பயன்படுத்தப் படுகிறது என்பது தவறு. கப்பல் ஆடியோவிழா அவர் நடத்தியதால்தான் விஜய், விக்ரம், ஏ.ஆர். ரகுமான் என்று வந்தார்கள், பிரமாண்டமாகவும் நடத்தப் பட்டது.

அடுத்த படம் குறும்படத்தை அடிப்படையாக வைத்து இயக்கவில்லை. புதிய கதை சமூகம் சார்ந்த செய்தியுள்ள படமாக இருக்கும். ”என்றார்.

-நமது நிருபர்