என் ரசனைக்கு படமெடுக்க மாட்டேன்! சுந்தர்.சி

IMG_4738ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது “இந்தப் படம் ஆம்பள’ யை பழைய படம் மாதிரி இருக்க வேண்டும் என்று 1980 காலகட்ட பாணியில் இருக்கவேண்டும் என்று வேண்டுமென்றே எடுத்தேன்.சகல கலா வல்லவன், முரட்டுக்காளை போல செய்யவே ஆசைப் பட்டேன்.

விமர்சனங்களில் நிறைகுறை இருக்கும். நிறைகுறைகளை எழுதினால்தான் அது விமர்சனம். ஆங்காங்கே குட்டு வைத்தாலும் ‘ஆம்பள’ கலகலப்பான ஜாலியான படம் என்றே எல்லாரும் எழுதி இருந்தார்கள்.

பலபேரும் தியேட்டர்களிலிருந்து. போன் செய்யும் போது பாராட்டுவதற்கு முன்பு நன்றி சொல்கிறார்கள் வசூலுக்கு. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் மல்லிகைப்பூ வாசத்தை உணர முடிகிறது என்கிறார்கள்.

‘அன்பே சிவம்’ போல படம் மீண்டும் எடுக்க  தயாரா என்கிறார்கள்.நான் தயார். ஆனால் தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.

சினிமா என்பது வியாபாரம். அதில் என் தனிப்பட்ட ரசனை சம்பந்தப்பட்ட தாக படம் எடுக்க முடியாது. ஒரு படத்தில் 1000 பேர் சம்பந்தப் பட்டுள்ளார்கள்.

இடைவேளையில் முறுக்கு சுண்டல் வேர்க்கடலை விற்பவர்கள் வரை  படம் ஓடினால் தான் சந்தோஷப்படுவார்கள். இந்தப்படத்தின் வசூல் பற்றி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் போடுகிறவர்கள் சென்னை சிட்டியை வைத்து கணிக்கக் கூடாது தமிழ்நாடு முழுக்க உள்ள தியேட்டர்களை வைத்து கணக்கிட்டு எழுதவேண்டும். இதுதான் எனக்கு சின்ன வருத்தம். விஷாலை வைத்து அடுத்து ‘உலகம்’ சுற்றும் வாலிபன்’ போல ஏழுநாடுகள் சுற்றி மெகா பட்ஜெட்டில் படமெடுக்க இருக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் விஷால்,வைபவ்,ஸ்ரீமன்,சதிஷ், அபிஷேக், கௌதம்,விச்சு, நடிகை ஐஸ்வர்யா, சண்டை இயக்குநர் கனல் கண்ணன்,  இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆகியோரும் பேசினார்கள்.