வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல்

prabakaaranபணத்துக்காக நடிக்க வந்தார். பணம் வந்ததும் வாங்கிக் கொண்டு நடிக்காமல் ஓடி விட்டார்  இதில் வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா? என்று ஒரு விழாவில் அப்படத்தின் இயக்குநர் பகிரங்கமாக பேசினார்.

பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன், சாண்ட்ரா, அப்புக்குட்டி, காளி, கலையரசன் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள படம் ‘ உறுமீன்’.இதை  ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று நடந்தது.

அப்போது படக்குழுவினர்  தங்கள் ‘உறுமீன்’  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிறகு கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. அப்போது இயக்குநரிடம் உங்கள் படத்தில் வேலுபிரபாகரன் நடிக்காதது குறித்து சர்ச்சை எழுப்பி வருகிறாரே என்று கேட்ட போது இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி கொதித்து விட்டார்.
”நாகரிகம் கருதி அது பற்றிப் பேசாமல் இருந்தேன். அவர் படப்பிடிப்புக்கு வந்தார். நடிக்கவில்லை. நடிக்காமலேயே கிளம்பி போய்விட்டார். அவர் கொள்கைக்கு விரோதமாக இருக்கிறதாம். தனிப்பட்ட கொள்கைவேறு  நடிப்பு வேறு இல்லையா? நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா முருகபக்தராக நடிக்க வில்லையா? சத்யராஜ்  குங்குமம் வைத்து நடிக்கவில்லையா?

அவருக்கு எப்படி நடிக்கப் போகிறோம் என்று தெரியாதா… ஒன்றுமே தெரியாமலா நடிக்க வந்தார். கதை கேட்கவில்லையா?

அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்கட்டும்  சம்மதித்து நடிக்க வந்துவிட்டு கொள்கை பேசுவது தவறு இல்லையா?அன்றைக்கு அப்போது அவருக்குப் பணம் தேவைப்பட்டது. பிறகு கொள்கை பேசுகிறார்.

அன்று அவர் போய்விட்டார். அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் தயாரிப்பாளருக்கு இரண் டேமுக்கால் லட்சம் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில்தான் சார்லியை நடிக்க வைத்தோம்.

அவரும் அனுபவமுள்ள டைரக்டர்தான். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் என்ன ஆகும் என்று அவருக்குத் தெரியாதா? செய்கிறதை செய்துவிட்டு இதுபற்றி பேஸ்புக்கில் வெட்கமில்ளாமல் எழுதி வருகிறார். இது கேவலமில்லையா என்று இதை நீங்கள் ஏன் அவரிடம் கேட்கவில்லை  ” என்று பொரிந்து தள்ளி விட்டார்.

அன்றைக்கு அப்போது அவருக்குப் பணம் தேவைப்பட்டது. பிறகு கொள்கை பேசுகிறார்  வேலுபிரபாகரன்.

ஆக காசு வாங்கிக் கொண்டு கம்பி நீட்டி விட்டாரா  வேலுபிரபாகரன் ?