தேர்தலுக்கு முன்னதாக விழிப்பூட்ட வருகிற படம் ‘கோ -2’

IMG_2815ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்  தயாரிக்க, பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பால சரவணன் நடிப்பில் ,சரத் இயக்கும் படம் ‘கோ2’.

இப் படத்தின் படக்குழு சந்திப்பு சென்னை வடபழனி  ஃபாரம் மாலில்   நடந்தது .

லியோன் ஜேம்ஸ் இசையில் உருவான பாடல்களும் டிரைலரும் திரையிடப்பட்ட  திரையிடப்பட்டன .

நிக்கி கல்ராணி ” இந்த படத்துல நான் நடிச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம் . ” என்றார் .

பாபி சிம்ஹா பேசும்போது ” நம்ம நாட்டுல பலரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடாம தெருவில போடறோம் . அதை ஏதோ சலுகைன்னு நினைக்கறோம் . ஆனா நாம எல்லோருமே  அதுக்காக 0.5 சதவீதம் வரி கட்டுறோம் . நாம ஒவ்வொருத்தரும் கட்டுறோம் . ஆனா அது வரி கட்டுற நம்மிலேயே எத்தனை பேருக்கு தெரியும்?

அதை இந்தப் படம் சொல்லுது. இது மாதிரி படத்துல மக்களுக்கு உபயோகமான பல நல்ல விசயங்கள் இருக்கு.

அதே நேரம் படம் முடிந்து வரும்போது நாம ஏன் சமூக அக்கறை இல்லாம இருக்கோம் என்ற ஒரு குற்ற உணர்வை எல்லோருக்கும் இந்தப் படம் உருவாக்கும் . எலக்ஷனுக்கு முன்னாடி வரும் இந்தப் படம்,  மக்களுக்கு தேவையான ஒன்று ” என்றார் .