நடுக்கடலில் நடக்கும் நடுங்க வைக்கும் கதை ‘ஆ’

aaa6அம்புலி 3டி’ படம் இயக்கிய ஹரி & ஹரீஷ் இணைந்து இயக்கும் அடுத்த படம் ‘ஆ’ திரைக்கதையில் புது முயற்சியாக இப்படம் ஆந்தாலஜி முறையில் உருவாகியுள்ளது.

ஒரே படத்தில் ஐந்து கதைகள். 5 வேறுபட்ட பாதையில் பயணிக்கின்றன. அட.. ஒரே கல்லில் 5 மாங்காய்.

உலகளாவிய தளத்தில் இருக்கும் இப்படத்தில்  வளைகுடா நாட்டில், ஜப்பானில், ஏடிஎம்மில், நெடுஞ்சாலையில்,நடுக்கடலில் என்று ஒவ்வொரு கதையும் நிகழ்கிறது.

எடுக்கப்பட்டுள்ள காட்சிகளைப் பார்க்கும்போது வித்தியாச  வெளிப்பாடும் நம்பிக்கையும் உணரமுடிந்தது. இதுஒரு திகில்படம்.

படம் பற்றி தயாரிப்பாளர் லோகநாதன், ஸ்ரீநிவாஸ் பேசும்போது.

“நாங்கள் அம்புலி படம் தொடங்கியபோது பலரும் தடுத்தார்கள். முதலில் படம் எடுக்கிறீர்கள். அதில் 3டி தேவையா? ஏன் இந்த ரிஸ்க்?  வேண்டாத வேலை..? பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே தியேட்டர் கிடைக்கவில்லை என்றார்கள். கதை பிடித்திருந்தது. இயக்குநர்களை நம்பினோம். நல்லது, புதுமை சொன்னால் ரசிகர்கள். வரவேற்பார்கள். என்று நம்பினோம். புதிய முயற்சியை மீடியா எல்லாரிடமும் கொண்டு சேர்த்தது. அம்புலி நூறுநாள் ஓடி வெற்றியும் பெற்றது பேசவும் பட்டது. அதே நம்பிக்கையில் மீண்டும் வந்திருக்கிறோம். நிறை குறை எது இருந்தாலும் எழுதுங்கள்.”என்றார்.எதுவாக இருந்தாலும் எழுதுங்கள் என்கிற இந்த  துணிச்சலையும் நம்பிக்கையையும் பாராட்டலாம்.