நடுத்தெருவுக்கு வந்த சினிமா படக்குழு!

papparapam1.jpg3வித்தியாசமாக, சமூகசேவையோடு படத்தைஅறிமுகம்செய்த ‘பப்பரப்பாம்’   படக்குழுவினர்..

இயக்குநர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனின் உதவியாளரும், ‘உறுமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ளபடம் ”பப்பரப்பாம்”.

‘நான்மகான்அல்ல’, ‘யாழ்’ படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். சதுரங்கவேட்டை இஷாரா, யாமினி, ராஜா, கதிர்கமல், நாய்கள் ஜாக்கிரதை ஜெனிஷ், சூப்பர்சிங்கர் புகழ் அழகேசன் உட்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் படக்குழுவினர்  கிட்டத்தட் டநூறுபேர் கலந்துகொண்டு பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம்அருகேயுள்ள சாலைகளை முழுவதுமாகச் சுத்தம்செய்தனர்.

”இப்படிசுத்தம்  செய்து  தங்கள் படத்தைஅறிமுகம் செய்வதைபெருமையாக நினைப்பதாகவும், இது இத்தோடு நிற்காமல் படம்வெளியாகும் வரைஇதே குழுவோடு வேறுவேறுஇடங்களில் எங்கள்பணியைத் தொடர்வோம்” என்றும்  கூறினார் இ யக்குநர் சசிகுமாரன். நாங்களும் சுத்தம்செய்கிறோம் என்கிறமாதிரிபோஸ் கொடுத்துவிட்டு ஓடிவிடாமல் அடிக்கிற வெயிலில் காலையில் ஆறுமணிக்கு ஆரம்பித்தசுத்தம் செய்யும்பணி மாலைஆறுமணிவரை குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம்செய்ததை பார்த்தஅந்த ஏரியாமக்களும்அவர்களோடு இணைந்துகொண்டனர். அந்தசாலையே அரசியல்வாதிகள் கூட்டம்போடும் நாளில்சாலை எப்படி பளிச்சென்று இருக்குமோ அவ்வளவுசுத்தமாகஇருந்தது.  ஐம்பது குப்பைத் தொட்டிகளை அந்தசாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் ‘பப்பரப்பாம்’படக்குழுவினர்.

மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப்பற்றிய ஒருகதைதானாம் ‘பப்பரப்பாம்.’

வித்தியாசமாக, சமூகசேவையோடு படத்தைஅறிமுகம் செய்துள்ளதாகக் கூறும் ‘பப்பரப்பாம்’  படக்குழுவினர்,இதை விளம்பரத்துக்காகவே செய்திருந்தாலும் கூட விளைவு நல்லதாக இருப்பதால் வரவேற்கவே வேண்டும்.papparapam2