புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை

kamalஊடகங்களுக்கு  கமல்  விடுத்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது :

நான்கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்விஎழுப்பியது போல் சிலஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன் வந்த செய்தி நான்அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டிஅல்ல. மின்அஞ்சல்வழி என்வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சிலஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்தபேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே.

கடிதத்தில் எங்கும் தமிழகஅரசு என்ற குறிப்போ, என்வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என்கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்.

என்வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம்இல்லை. விட்டுவிட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும்வலையதள தொடர்பினாலும்என்னைப்பற்றி ஊடகங்களில் வரும்வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனதுசில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒருகண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில்ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால்வெளிப்படும் என் உண்மைநிலைபுரியும் என்றுநான்எண்ணியது தவறு என உணர்கிறேன். என்நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்குஉதவும் அன்புகட்டளைகள் பிறப்பித்துக்கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதுதவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதுதிரு. O. பன்னீர்செல்வம்அவர்களின்அறிக்கைக்குபதில்அறிக்கைஅல்ல.

களத்தில் இறங்கிவேலை செய்து கொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும்குழப்பத்தில் நற்பணிசெயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

பக்தரும் பகுத்தறிவாளரும் பலமதத்தாரும் உண்டு எங்கள்இயக்கத்தில். இந்தநேரம் கட்சிகளுக்கு  அப்பாற்படவேண்டியநேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்படவேண்டிய பேரிடர்காலம். கள மிறங்கிவேலைசெய்யும் யார்மனதையும் நான்சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாதபிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்கவேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கியநண்பர்களும் என்னைகடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்துசெய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகுபார்த்துக் கொள்ளலாம்.

தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் எனஅஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும்    அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்தஅரசியல்கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்ப்பணிச் சேவைகளை தொடரும் அந்தசந்தோஷத்திற்காகவும் செளகரியத்துக்காகவும்தான்.

அன்புடன்,

கமல்ஹாசன்.

இவ்வாறு   கமல்  விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருக்கிறார்.