போரடித்து விட்டது இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் : சோனா அதிர்ச்சி அறிவிப்பு

sona1ஏராளமான படங்களில் கவர்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா.  இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்தார். இப்போது இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சோனா  அதிர்ச்சியான அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது…

அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது.               இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். காரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க முடுவெடுத்திருக்கிறேன்.

கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர்ன்னு வரும் போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள் நான் நல்ல காரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன் ” என்றார் சோனா.

படைப்பாளிகளே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் சோனாவின் பெயரை.

சோனாக்காவை இனி சொர்ணாக்காவாகப் பார்க்கலாமா?