முதலில் கட்டடம் பிறகுதான் கல்யாணம்: விஷால் உறுதி

Vishal24முதலில் கட்டடம் பிறகுதான் கல்யாணம்: கட்டடம் கட்டிவிட்டுத்தான் கல்யாணம் கட்டுவேன் என்றார் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷாலின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஊடகங்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்றியதைப் பாராட்டினார்.,தேர்தலை  மக்களிடம் கொண்டு சென்றதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது,

” உங்களை ஒரு நடிகராகவோ  ,நடிகர் ச ங்கத்தின் செயலாளராகவோ நான்  சந்திக்க வரவில்லை சக நண்பனாகவே சந்திக்கிறேன்.

கடந்து போன 10 ஆண்டுகளில் இது மறக்க முடியாத ஆண்டு   இது மறக்க முடியாத தீபாவளி சந்திப்பு.

கடந்த ஒரு மாதத்தில் இவ்வளவு பிஸியாக ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சி. நான் தற்போது இரண்டு வேலைகளை பார்த்து வருகிறேன். நடிக்கவும், நடிகர் சங்க செயலாளர் வேலையையும் பார்த்து வருகிறேன். நடிகராக நடிகர் சங்கத்தின்செயலாளராக பொறுப்புகள் கடமைகள் நிறைய இருக்கிறது. இரண்டையும் செய்யவேண்டும் .

கடினமாக உழைத்தால் பலன் உண்டு,வெற்றி நிச்சயம். இதுதான் என் தாரக மந்திரம். . இதுதான் எப்போதும் எனக்குள் நான் சொல்லும் என் தாரக மந்திரம் அதற்குக் கிடைத்த வெற்றிதான் அக்டோபர்-18.

எனக்காக எங்கள் அணிக்காக உலகம் முழுக்க கோயில்கள். சர்ச்கள். மசூதிகள்,பூஜைரூம்கள்,  என எத்தனை பிரார்த்தனைகள். மிகவும் நெகிழ்ந்து விட்டேன்.

அம்மாவிடம் யார்யாரோ போன் செய்து எனக்காகப் பிரார்த்தனை செய்ததைக் கூறியிருக்கிறார்கள்.அம்மா சொல்லக் கேட்டபோது சத்தியமாக நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

நடிகராக அடுத்த படம் என்றால் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘கதகளி’ 2016 பொங்கலுக்கு வருகிறது. ‘கதகளி’ புது வித த்ரில்லர்படமாக இருக்கும்  .

‘சண்டக்கோழி2′ தொடங்க இருக்கிறது. முத்தையாவின்’ மருது’ அடுத்து தொடங்க இருக்கிறது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

ஒரு படம் முடிந்துதான் அடுத்தபடம் இதுதான் என் முடிவு நடிகர் சங்கத்தின் சார்பாக தீபாவளி பரிசு வீடு வீடாக போனதில் பெற்றுக்கொண்ட அவர்களுக்கும் மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி. ஸ்ரீப்ரியா போன் செய்து தாய்வீட்டு பரிசு வந்தததாக சொன்னார்.எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நடிகர் ச ங்கத்தின் கட்டட வேலைகள் மும்முரமாகப் போகிறது. ஒப்பந்த ரத்து பத்திரத்தை சரத்சார் கொடுத்து விட்டார். இனி பிரச்சினை இருக்காது தடை வராது. எல்லாம் பாசிடிவா போகிறது.

திருமணம் பற்றி கேட்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது தான் என்னுடைய முழு முதல் திட்டம். கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும்.என்னுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. நிச்சயம் காதல் திருமணம்தான். நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதை தக்க சமயத்தில் நானே உங்களிடம் அறிவிப்பேன்.

வருகிற 2017ல் கட்டடத்தைக் கட்டிவிடுவோம். இதற்காக படம் எடுக்கும் திட்டம் உள்ளது. நடிகர் சங்கத்தில் அரசியல் கிடையாது . இங்கே அரசியல் நுழைய வேண்டாம். அரசாங்கம் என்று ஒன்று செயல்படும்போது எந்த அரசியல் சார்ந்த விஷயத்திலும்நடிகர் சங்கம் பங்கெடுக்காது ஈடுபடாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

இதைத் தவறாகப் புரிந்து கொண்டு சிலர் பேசுகிறார்கள். என்னை எதிர்த்து வீட்டை முற்றுகை இடுகிறார்கள் நான் அந்த ப்போராட்டக்காரர்களிடம் சொல்கிறேன். நாலு ஏழைப் பிள்ளைகளை  படிக்க வையுங்கள் ” என்றவரிடம் ராதாரவியுடன் நடிக்கப்போவதாக செய்தி வந்தததைப்பற்றிக் கேட்டபோது இயக்குநர் முடிவு செயாதால் ராதாரவியுடன் மட்டுமல்ல சரத்சாருடனும் நடிப்பேன் நாங்கள் எல்லாருமே நடிகர்கள்தானே?.போட்டி எல்லாம் நடந்து முடிந்த தேர்தலோடு சரி.”என்றார்.