விஜய்யை நடிக்க வைக்கும்படி முன்னணி இயக்குநர்கள் அத்தனை பேரிடமும் கெஞ்சினேன் :எஸ்.ஏ. சந்திரசேகரன் ஓபன் டாக்

sac1விஜய்யை நடிக்க வைக்கும்படி முன்னணி இயக்குநர்கள் அத்தனை பேரிடமும் கெஞ்சினேன்.நடிகருக்காக படம் ஓடாது. கதைக்காகவே ஓடும்!ஹீரோவுக்காக முதல் நாள் மட்டுமே கூட்டம் வரும். அடுத்த நாள் கதை நன்றாக இருந்தால்தான் படம் ஓடும் என்றெல்லாம் ஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.

எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்து இயக்கியுள்ள படம் ‘டூரிங் டாக்கிஸ்’ ஸ்டார் மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர்  வெளியீட்டு விழா இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில்  நடந்தது.

விழாவில் இப்படத்தின் நாயகனான எஸ்.ஏ. சந்திரசேகரனை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிமுகப் படுத்தினார். ”அம்மாவை அறிமுகப் படுத்துவதைப் போல இவரை அழைக்கிறேன். இவரிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம். என்னை துணிச்சலாக காட்சிகள், வசனங்கள் வைப்பதாகக் கூறுகிறார்கள். எனக் கெல்லாம் முன்னோடி இவர்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பே துணிச்சலான காட்சிகள், வசனங்கள் என்று கலக்கியவர். “என்று கூறினார்.

எஸ்.ஏ.  சந்திரசேகரன் பேசும் போது பலவற்றை வெளிப்படையாகப்  பேசினார் “நான் இன்றும் முதல் படத்தை எடுப்பது போலவே அதே மனநிலையில்தான் வாழ்ந்து வருகிறேன். நான் செய்தது எதையும் சாதனையாக நினைக்கவில்லை. அதை யெல்லாம் கவனிப்பதில்லை. சினிமாவில் இருப்பதை சினிமாவில் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன்.

touring-talkies-stills-photos-pictures-0340 ஆண்டுகளுக்கு முன் சினிமாவுக்கு வர 7 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து பட்டினியாகக் கிடந்தேன். அப்போது எனக்குள் சுவாசம் இருந்தது. சினிமா.. வையே சுவாசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த சுவாசம் இன்னும் இருக்கிறது. எனக்குள் இருக்கும் காதல், மோகம், வெறி, சுவாசம் எல்லாமே சினிமாதான்.

என் முதல் 10 படங்களையும் கன்னடம், தெலுங்கு, இந்தி என நானே இயக்கினேன்: அதுபோல் இதையும் வேறு மொழிகளில் இயக்க ஆசை. நான் என்றைக்கும் சொல்வேன் கதைதான் ஹீரோ. ஒருபடம் 100 நாள் ஓடவேண்டும் என்றால் ஹீரோ இருந்தால் 50 நாள் ஓடும். மீதி 50 நாள் கதை இருந்தால்தான் ஓடும்.

தியேட்டரில் நடிகர் முதல்நாள் கூட்டம் சேர்க்க உதவலாம். 2 வது நாள் கதை இருந்தால்தான் ஓடும்.

இந்தப் படத்தில். நான் ரொமான்ஸ் செய்வதாக எழுதுகிறார்கள்.ஆனால் நான்75 வயது கிழவனாகத்தான் வருகிறேன் 90ல் என் மகன் நடிக்க ஆசைப்பட்ட போது விஜயை நடிக்க வைக்கும்படி எல்லா முன்னணி இயக்குநர் களிடமும். கேட்டேன். முன்னணி இயக்குநர் கள் அத்தனை பேரிடமும் கெஞ்சினேன். ஆனால் நடக்கவில்லை. வேறு வழியில்லை ஏன் நாமே தயாரித்து இயக்கக் கூடாது என்று முடிவு செய்து தயாரிப்பாளரானேன்.

இப்போது கூட அன்று நான் ராஜகுமாரி தியேட்டர் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தது நினைவுக்கு வருகிறது. இன்று எனக்கு கடவுள் எல்லாமும் கொடுத்திருக்கிறார். துக்கம் மகிழ்ச்சி இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள பழகி இருக்கிறேன். பழைய கதையைப் பேசுவதில் பயனில்லை .இன்று வரும் இளைஞர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவர்களைப் பார்த்து ஆச்சரியப் படுகிறேன். . ஏ.ஆர். முருகதாஸ் அமைத்த ‘துப்பாக்கி’ திரைக்கதையில் அசந்து போனேன். அவர் கதை சொன்ன போதே இடைவேளை வரை கேட்டு விட்டு கட்டிப்பிடித்துப் பாராட்டினேன். நான் அண்மையில் வெளியான அத்தனை வெற்றிப் படங்களையும். பார்த்து விட்டுதான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். “என்றவர் “புதிய தயாரிப்பாளர் சங்கம் அரசியலுக்கு இடம் தராமல் ஒரே அணியில் செயல்பட்டு சிறு தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும்.”என்றார்.

விழாவில் புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலைப்புலி எஸ்.தாணு .டி. சிவா உள்ளிட்ட அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.விழாவில் கே.வி.ஆனந்த், வீ.சேகர். சேவியர் பிரிட்டோ, விமலா பிரிட்டோ, நா.முத்துக்குமார். ஆகியோரும் பேசினார்கள்.