வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

vairamuthu-newநாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா
கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவமாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள்.

இந்தவிழாவில் கவிஞர்வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பலஅடிகளார், தினமணிஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்புவிருது வழங்கப்படுகிறது.

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியோடு சிறப்புப்புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும்முயற்சி இது என்றுவிழாவை ஏற்பாடுசெய்துவரும் தருண்விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்தவிழாவில் கலந்து கொள்வதற்காக 16ஆம்தேதி பிற்பகல் விமானத்தில் கவிஞர்வைரமுத்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.