56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார். “முழுப்படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டதுContinue Reading

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎத்தனை ஆயிரம் பாடல்களைஎத்தனை மொழிகளில் பாடியஉன்னதக்கலைஞன் !மூச்சுக்காற்று முழுவதையும்பாடல் ஓசையாக மாற்றியவன் !இமயத்தின் உச்சம் தொட்டும்பணிவின் வடிவமாகபண்பின் சிகரமாகஇறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன்…இதுவரை மக்களுக்குபாடியது போதும்இனி என்னிடம் பாட வாஎன்று இறைவன்அழைத்துக் கொண்டான்!போய் வா தம்பி இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.Continue Reading

தங்கர் பச்சான் அறிக்கை! மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது? கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள். அத்தகையவர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழகத்திலுள்ள அனைத்துக்Continue Reading

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 டொரண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில், மூன்று விருதுகளை வென்றுள்ளது ! இயக்குநர் ராதகிருஷணன் பார்த்திபனைத் தேடி, வாழ்த்து மழை, தொடர்ந்து குவிந்து வருகிறது. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒருContinue Reading

‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற  மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த கேம் ஷோ வரும் செப். 19, 2020 அன்று மாலை 6 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது.Continue Reading

காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர் அறிமுகம்!மாயாண்டி கருணாநிதிபகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்பரேட்Continue Reading

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,Continue Reading

கதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன்.  வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம். நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. படத்தின் வியாபாரத்தை தாண்டி பல மடங்கு செலவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்குContinue Reading

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது. மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார்  நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம்Continue Reading

புதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது  “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’  என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம்Continue Reading