அண்மையில் வெளிவந்த படங்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த ‘மீசைய முறுக்கு 2’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதனை முன்னிட்டுப் படக் குழுவினர் ஊடகங்களைச் சந்தித்தனர். அப்போது சிறப்பு விருந்தினராக தேவா வந்திருந்து ஹிப் ஹாப் ஆதியை முத்தமிட்டு வாழ்த்தினார்.இதை நினைத்து ஆதி நெகிழ்ச்சியில் மகிழ்ந்தார் .இந்தத் தருணத்தை ‘இது போதும் எனக்கு இது போதுமே’ என்ற வரிகளைப் பகிர்ந்து தேவாவிற்கு தனது நன்றிகளை ஆதி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திவரும் “மீசைய முறுக்கு-2” படத்தின் இயக்குநர், கதாநாயகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-க்கும் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில். செப்டம்பர் 25ஆம் தேதி வெளியான மீசைய முறுக்கு-2 திரைப்படம் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்து அசத்தியுள்ளது.
விழாவில் குஷ்புவின் பிறந்தநாளையும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.





