நடிகர் திலகம் நினைவு தினம் :நடிகர்சங்கம் மலர் மரியாதை!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகின் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு தினத்தையொட்டி இன்று (21.07.2026) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் சங்க தலைவர் நாசர், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், தளபதி தினேஷ் , . லலித குமாரி,  ஹேமசந்திரன், நியமன செயற்குழு உறுப்பினர்கள் கலீலுல்லா , கே.கே..சரவணன் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.