மக்களின் ஆதரவோடு வெற்றிப்பாதையில் ’மூக்குத்தி அம்மன்2′

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அது வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை வைத்துத்தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு வந்த படங்களில் மக்களின் ஆதரவோடு ‘மூக்குத்தி அம்மன் 2’ மகாசக்தி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.ரசிகர்களின் குறிப்பாகப் பெண்களின் வரவேற்புடன் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

அப்பாவிப் போலீஸ்காரராக இப்படத்தில் தோன்றி நடித்துள்ள நயன்தாராவின் நடிப்பு பாராட்டப்படுகிறது. அதே வேளை அவர் அம்மனாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள் திரையரங்குகளில் பயங்கர உணர்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இப்படி இந்தப் படத்தில் நடித்துள்ள ரெஜினா கசான்ட்ரா, ,துனியா விஜய், ஊர்வசி யோகி பாபு ,மைனா நந்தினி, கருடா ராம், அபிநயா, ஸ்ருதி.எஸ், சிங்கம்புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சிவகுமார்.எஸ், சுனில் வர்மா என அனைத்து நடிகர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறொரு பரிமாணத்தில் வெளிப்பட்டுள்ளனர். அந்த வகையில் சுந்தர் சி யின் வெற்றி வரிசையில் இடம் பெற்றுள்ள படமாக இந்த மூக்குத்தி அம்மன் 2 அமைந்துள்ளது.

விமர்சனங்களைத் தாண்டி மக்களின் வரவேற்பில் விஸ்வரூபமான வெற்றிப் பாதையில் மக்கள் கொண்டாடும் ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படமாக இந்தப் படம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.