அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் ‘பம்பாய் மேரி ஜான்’ ட்ரெய்லர்!

பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துக் செல்லும் இந்த கிரைம் திரில்லரில் கே கே மேனன், அவினாஷ் திவாரி, கிருத்திகா கம்ரா மற்றும் நிவேதிதா பட்டாச்சார்யா ஆகியோருடன் சேர்ந்து அமைரா தஸ்தூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன

இந்தியாவிலும், உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 14 முதல் பம்பாய் மேரி ஜான் ஸ்ட்ரீம் செய்யப்படும்

பம்பாய் மேரி ஜான் டிரெய்லரை இங்கே காணுங்கள்

மும்பை, இந்தியா—செப்டம்பர் 4, 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அது விரைவில் வெளியிட இருக்கும் கற்பனை க்ரைம் த்ரில்லர் அமேசான் ஒரிஜினல் பம்பாய் மேரி ஜான் தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. எக்செல் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட்டின் ரித்தேஷ் சித்வானி, காசிம் ஜக்மகியா (Ritesh Sidhwani, Kassim Jagmagia) மற்றும்ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) தயாரிப்பில், எஸ். ஹுசைன் ஜைதி எழுதிய கதை , பம்பாய் மேரி ஜான் ரென்சில் டி சில்வா மற்றும் ஷூஜாத் சௌதாகர் (Rensil D’Silva மற்றும் Shujaat Saudagar) ஆகியோரின் உருவாக்கத்தில், ஷுஜாத் சவுதாகர் இயக்கிய இந்த தொடரில், அமைரா தஸ்தூருடன் (Amyra Dastur), கே கே மேனன் (Kay Kay Menon), அவினாஷ் திவாரி (Avinash Tiwary), கிருத்திகா கம்ரா, (Kritika Kamra) மற்றும் நிவேதிதா பட்டாச்சார்யா (Nivedita Bhattacharya) போன்ற பன்முக நடிப்பாற்றல் மிக்க நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார்கள். 10 பாகங்கள் அடங்கிய இந்த இந்தி ஒரிஜினல் தொடர் செப்டம்பர் 14 அன்று இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போர்த்துகீசு, ஜப்பான், போலிஷ், லத்தீன் ஸ்பானிஷ், காஸ்டிலியன் ஸ்பானிஷ், அரபிக் மற்றும் துருக்கி. போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படும். இந்தத் தொடரானது, சீன , செக், டேனிஷ், டச்சு, பிலிப்பினோ, ஃபின்னிஷ், க்ரீக், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்கம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய், உக்ரேனிய மற்றும் வியட்நாமீஸ் உட்பட பல்வேறு அயல்நாட்டு மொழிகளில் சப்டைட்டில்களுடன் கிடைக்கும்.

“ஜப் இமான்தாரி புக் ஸே தக்ராதி ஹை தோ ஹமேஷா ஹார்தி ஹை. மேன் இமான்தார் தா, பர் தரா பூகா தா.” (“Jab imaandari bhuk se takraati hai to hamesha haarti hai. Main imaandar tha, par Dara bhooka tha.”) என்ற ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் பின்னணிக் குரலோடு தொடங்கும் இந்த, பம்பாய் மேரி ஜான் ட்ரெய்லர், 1970 காலகட்டத்தில், குண்டர்களிடையேயான யுத்தம், குற்றச்செயல்கள் மற்றும் துரோகங்கள் போன்ற செயல்பாடுகள் அன்றாட நிகழ்வுகளாகிப்போன கற்பனையில் உருவான பம்பாய் நகரத்தின் நிழல் உலக தெருக்களினூடே ஒரு விடாப்பிடியான ஆழ்ந்த அதிவேகப் பயணத்திற்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது. இந்த பின்னணியுடனான இந்த கற்பனைத் தொடர் வாழ்க்கைப் போராட்டத்தில் வறுமையை வெற்றிகொள்ள குற்றசெயலில் ஈடுபடும் தனது மகனை காண நேரும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் மனதைக் கவர்ந்திழுக்கும் ஒரு கதையாகும். இழந்து போன பண்புகள், அதற்கு மாற்றாக பேராசை, மற்றும் ஒழுக்கக் கேடுகளால் சின்னாபின்னமாகிப் போகும் தனது குடும்பத்தை காண நேரும் ஒரு தந்தையின் மன வேதனையை இந்த டிரைலர் கோடிட்டுக் காட்டுகிறது

ஒளிபரப்பப்பட தயாராக இருக்கும் இந்தத் தொடரில் தனது பாத்திரம் குறித்துப் பேசுகையில் கே கே மேனன் கூறினார், “இஸ்மாயில் கத்ரி என்ற நான் ஏற்று நடித்திருக்கும் இந்தக் கதாபாத்திரம் பல அடுக்குகளாலான சிக்கல் நிறைந்த ஒன்று. அவர் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி. ஆனால் மோசமான ஒரு மகன் மீது பாசத்தை பொழியும் ஒரு தந்தையாகவும் இருக்கிறார். அனைத்து குற்றங்களிலிருந்தும் பம்பாய் நகரத்தை விடுவித்து மேம்படச்செய்ய ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இயங்குகிறார், ஆனால் மறுபுறம், அதற்கு நேர்மாறாக தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி, நகரிலுள்ள குற்றவாளிகளின் கும்பலால் ஆட்டிவைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். தன்னைச் சூழும் தீவினைகளுக்கு அடிபணியாமலிருக்க அனைத்து சோதனைகளையும் எதிர்த்துப் போராடும் இஸ்மாயில் தனது இரத்தமும் சதையுமான தனது மகனே குற்றவாளிகளின் மத்தியில் ஒரு புதிய தலைவனாக அவதாரமெடுப்பதை காண நேர்கிறது. இந்த கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் ஷுஜாத் மற்றும் ரென்சிலின் ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை தெளிவாகவும் மற்றும் துல்லியமாகவும் இருந்த காரணத்தால் , இந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு எளிதாக இருந்தது. இது போன்ற அடிவயிறைக் கலங்கச்செய்யும் மயிர்க்கூச்செறியும் கதையில் என்னையும் ஒரு அங்கமாக செயல்படச் செய்ததற்கு பிரைம் வீடியோ மற்றும் எக்செல் எண்டர்டெயின்மென்ட்டின், ரென்சில் மற்றும் ஷுஜாத் ஆகியோருக்கு எனது நன்றி. .

அவினாஷ் திவாரி கூறுகையில், “எனது தாரா கத்ரி கதாபாத்திரம் குறித்து நான் முதன்முதலில் ஸ்கிரிப்டைப் படித்தபோது, வியப்பில் ஆழ்ந்த அதே சமயம் சற்று தயக்கமாக உணர்ந்தேன். பம்பாய் மேரி ஜான் தொடரில் நான் ஏற்று நடிக்கும் நடிக்கும் பாத்திரப்படைப்பு தங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகச் சில நடிகர்களுக்கே கிடைக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பாகும். எனது கண்ணோட்டத்தில், வில்லன்கள் எங்குமே இருக்கிறார்கள், அதே சமயம் நேர்மையான கடின உழைப்பு எந்த ஒரு செல்வத்தையும் அதிகாரத்தையும் நமக்குப் பெற்றுத் தராது என்று நம்பும் தாரா, போன்ற ஆற்றல்மிக்க இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம். ஒன்றுமில்லாத (பசி) நிலையிலிருந்து இருந்து ஏதோ ஒரு இடத்தைப் பிடித்து (குடும்பத்திற்கும் மக்களுக்கும் ஆதரவாக) அதைத் தொடர்ந்து அனைத்தையும் வெற்றிக்கொள்ளும் (அதிகாரம்), அவரது பயணத்தில் பூக் (பசி) ஒரு ஒன்றிணைந்த பாகமாகும். அனைவரும் பயமும் மரியாதையும் சரிசமமாக கலந்த உணர்வோடு பணிந்து வணங்கும் ஒரு நிலையை அடைய, அவர் ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு மிருகமாக மாறுகிறார். ஒரு இயக்குனராக ஷுஜாத்தின் படைப்பாற்றல், சிறு சிறு விவரங்களின் மீது அவர் செலுத்திய ஆழ்ந்த கவனம் மற்றும் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் வகையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் மன எழுச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கவல்ல அவரது செயல்திறன், காரணமாக இதன் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தின் போது அவரும் ரென்சிலும் கற்பனை செய்த வகையில் தாராவை உயிர்த்தெழச் செய்ய எனக்கு உதவியது. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களிடமிருந்து எதிர்வினைகளை காண நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.