‘இண்டிவுட் ‘ உலகத்திரைப்படவிழாவுக்கு பிலிம் சேம்பர் ஆதரவு!

indywood-film-carnival-2016_499198-d6867e தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள்  இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு

இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் என்பது 10 பில்லியன் டாலர் திட்டமாகும். திரைப்பட தயாரிப்பில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் இன்டிவுட் இந்திய படங்களை திரையிடுவது, சந்தைப்படுத்துவதில் வித்தியாசமான உத்திகளைக் கையாள்கிறது

இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் 200 பங்கேற்பாளர்கள் மற்றும் 2,000 சர்வதேச பார்வையாளர்கள் 75  நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர்

இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல், உலகின் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமானது. உலகின் சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் விழாவாக இது இருக்கிறது. இந்த திரைப்பட விழாவுக்கு தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னையில்  நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் திரு கங்காராஜ் மற்றும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு எஸ். தாணு ஆகியோர் இன்டிவுட் திரைப்பட விழா (கார்னிவல்) தாங்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதை விவரித்தனர்.

இந்த விழாவின் முக்கிய அம்சமே புராஜெக்ட் இன்டிவுட். இன்டிவுட் திரைப்பட விழாவானது 1,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான இன்டிவுட் திட்டத்தின் ஒரு அம்சமாகும். இந்தத் திட்டத்தை உருவாக்கியவரே திரு சோஹன் ராய் ஆவார். இவர் ஏரிஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மட்டுமின்றி இன்டிவுட் திட்டத்தின் இயக்குநரும் ஆவார்.  இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே 5 ஆண்டுகளில் இந்திய திரைப்படத் துறையை முற்றிலுமாக மாற்றி ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்துவதாகும்.

திரு சோஹன் ராய், நிறுவனர் தலைவர் – ஏரிஸ் குழும நிறுவனங்கள் மற்றும் புராஜெக்ட் இன்டிவுட் திட்ட இயக்குநர் கூறியது:

இந்தியத் திரைப்படத் துறையானது சர்வதேச அளவில் மிகப் பெரிய துறையாகும். சர்வதேச சந்தையில் 40% இடத்தை இந்தியத் திரைப்படத்துறை வசப்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் திரையரங்குகளில் திரையிடல் ஆகியவற்றிலும் இந்திய திரைப்படத் துறை முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இத்துறை உரிய வருவாய் ஈட்டுவதில்லை. சர்வதேச தொழில்நுட்பம், தரத்துடன் தயாரிக்கப்படுவதில்லை. தயாரிப்பு, விநியோகம், காட்சிப்படுத்தல் பிராண்டிங் உள்ளிட்டவை அனைத்துமே வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளைக் களைய இந்திய திரைப்படத்துறைக்காக உருவாக்கப்பட்டதுதான் இன்டிவுட் புராஜெக்ட் ஆகும். இன்டிவுட் திட்டத்தின் ஆரம்பகட்ட முதலீடு 1,000 கோடி அமெரிக்க டாலாரும். இந்த முதலீட்டை 2000 நிறுவனங்கள் இணைந்த கூட்டமைப்பு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மேற்கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். இதற்கான முதல் கட்ட முதலீட்டாளர் கூட்டம் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் நடைபெற உள்ளது.

திரு கங்காராஜ், தலைவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூறியது:  இந்திய திரைப்படத் துறையைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த வளங்களை முற்றிலுமாகப் பெறுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் இதற்கான நடவடிக்கை எடுக்க சிறந்த தளமாகத் திகழும். இத்தகைய நடவடிக்கைக்கு முதல் முறையாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவின்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்தும் விவாதிக்கப்படும். இந்த வரி விதிப்பு எந்த அளவுக்கு திரைப்படத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் விவாதிக்கப்படும். இந்த விவாதங்கள் அனைத்தும் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் பதிவு செய்யப்பட்டு அதன் பிரதி மத்திய அரசுக்கு அளிக்கப்படும். இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

தென்னிந்திய திரைப்பட வர்த்த சபையானது திரைப்பட திருட்டை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இது இன்டிவுட் ஃபிலிம் கார்னிவலில் முக்கியமாக வலியுறுத்தப்படும். சங்கத்தின் தலைவர்கள் திரைப்பட திருட்டு வீடியோக்களை எவ்விதம் தடுப்பது என்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவரிப்பர். அரசுடன் இணைந்து இதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். திருட்டு வீடியோக்களை ஒழிப்பது தொடர்பான அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்படும். இது அரசு தொடர் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

திரு எஸ். தாணு, தலைவர், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்:

இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல், இத்துறையின் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்க மிக முக்கியமான தளமாக அமையும். திரைப்படத் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்க இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். திரைப்படத் துறை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இன்டிவுட் திட்டத்துக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தனது முழு ஆதரவை அளிக்கிறது. எனது தலைமையிலான இந்த விழாவில் இந்தியா முழுவதிலிருந்து தயாரிப்பாளர்கள் பங்கேற்று பின்வரும் தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.
indywood_film_announcement-052616
1.   இந்திய திரைப்படத் துறையை சீரமைக்க தேவைப்படும் மற்றும் அதற்கான அவசியம்

2.   நிதி உதவி அளிக்கும் அமைப்புகளிடம் நம்பக்தன்மையை வளர்ப்பது / முதலீட்டாளர் / கார்ப்பரேட் நிறுவனங்கள்  உள்ளிட்டவை பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளும் விதம்

3.   திரைப்படத் தயாரிப்பில் செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதம்

4.   எந்தெந்த இடங்களில் அரசின் ஆதரவு தேவைப்படும் என்பதை கண்டறிவது

5.   திருட்டு வீடியோ ஒழிப்பு – உறுதியான நடவடிக்கை

இந்த விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து அது தொடர்பான விவர அறிக்கையை அரசுக்கு அளிக்க உள்ளோம்.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விழா தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழா, திரைப்படத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கக் கூடியது.  இந்திய சினிமாத் துறையை சர்வதேச தரத்துக்குக் கொண்டு செல்ல வழிவகுக்கக் கூடியது. இந்த விழாவில் 2,000 பிரதிநிிதகள் மற்றும் 75 நாடுகளிலிருந்து 20 ஆயிரம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறை வல்லுநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் முனைவோர், திரைத்துறை பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், ரசிகர்கள் அனைவரும் இன்டிவுட் திரை விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டிவுட் ஃபிலிம் கார்னிவலில் 15 மெகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் கட்டமாக சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். நாடுகளின் எல்லைகளைக் கடந்து, வழக்கமான தடைகளைத் தாண்டி, மொழி மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்த விழாவாக அமையும். இந்திய சினிமாத் தொழிலில் பொதிந்துள்ள வாய்ப்புகளைக் கண்டறிய உதவும் தளமாக இது நிச்சயம் அமையும். இன்டிவுட் திரைப்பட விழா மூலம் மாநிலங்களின் கலாசாரத்தை பறைசாற்றவும்  இந்த விழா உதவும்.

இந்த கார்னிவலில் முக்கிய நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை: இந்திய வெளியுறவு அமைச்சகம் – முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பிரிவு, இந்திய திரைப்பட சம்மேளனம், இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய சினிமாட்டோகிராபர் சங்கம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கம், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், யுஎன் மகளிர், இன்கிரெடிபிள் இந்தியா, மத்தியப் பிரதேச சுற்றுலா, மகாராஷ்டிர சுற்றுலா, குஜராத் சுற்றுலா உள்ளிட்வை இவற்றுள் முக்கியமான சிலவாகும்.