‘உப்புக் கருவாடு’ வித்தியாசமான அனுபவம் : இயக்குநர் ராதாமோகன்

radhamohan2நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் ‘உப்புக் கருவாடு’ ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இயக்குநர் ராதா  மோகனின் படங்கள் என்றாலே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு  வந்து  கண்டு களிக்க  ஒரு நகைச்சுவை கலந்த ஆபாசம் இல்லாத , வன்முறை இல்லாத படமாக உப்பு கருவாடு இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது. அதிகரித்து வரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை இதை உறுதிபடுத்துகிறது.

இந்த படத்தில் பிரதான வேடத்தில் நடித்து இருக்கும் கருணாகரன், நந்திதா ஆகிய இருவருமே பெரும்பாலும் வெற்றிப் படங்களில் நடித்தவர்கள்தான். படம் வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.எம் எஸ் பாஸ்கர்,மயில்சாமி,ஷாம்,குமரேசன், டவுட் செந்தில், என்று குவிந்து இருக்கும் நகைசுவை நட்சத்திரப் பட்டாளம் படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது. ‘உப்பு கருவாடு’ நிச்சயமாக  எனது முந்தைய படங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படம் இயக்குவது எனக்கு வித்தியாசமான அனுபவம்’ என்று கூறினார் இயக்குநர் ராதா மோகன்.