எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ரியோ ராஜ் நடித்து உருவாகியுள்ள படம் ‘ஜோ’!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள படம் ‘ஜோ’!

ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ’ஜோ’. ’மீசையை முறுக்கு’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற படங்களில் இயக்குநர் பிரிவில் பணி புரிந்தவர் ஹரிஹரன் ராம்.

கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ
மாணவியரின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும் இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்கிறார் ரியோ.

இந்தப் படத்திற்கு ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, இசை சித்து குமார், படத் தொகுப்பு கே ஜி வருண். படத்தில் ஒரு கல்லூரி நடனப்பாடல் மற்றும் மிகக் குறைவான இசைக் கருவிகளை வைத்து யதார்த்தமான ஒலிகளோடு அந்தப் பாடல் அமைத்து இருக்கிறோம் என இசையமைப்பாளர் சித்து குமார் கூறியுள்ளார். மேலும் இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு பெரும்பலம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. (எடிட்டிங்), ஏபிஆர் (கலை), அபு & சால்ஸ் (கோரியோகிராஃபி), பவர் பாண்டியன் (ஆக்‌ஷன்), வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா (பாடல் வரிகள்), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), எம். முகமது சுபியர் (காஸ்ட்யூமர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது