ஒரு போனின் விபரீதக்கதை ’அல்டி’

தயாரிப்பாளர்கள் ஷேக் முகமது மற்றும் ரஹ்மதுல்லா இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அல்டி’தயாரிப்பாளர்கள் ஷேக் முகமது மற்றும் ரஹ்மதுல்லா இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அல்டி’.

இந்தப் படத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்க, கதாநாயகி வேடத்தில் மனிஷாஜித் நடித்திருக்கிறார்.

சென்ராயன் பிராதன பாத்திரம் ஒன்றில் நடிக்க யாசி, ராபர்ட், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ் ‘பசங்க’ சிவகுமார், சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன், நெல்லை சிவா டி.எஸ்.ஆர். ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிlதிருக்கின்றனர்.

ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நடனக் காட்சிகளை ராபர்ட் அமைக்க, படத் தொகுப்பை வில்ஸி கவனிக்கிறார். கலை இயக்குநராக சிவகுமார் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் ஜாக்கி ஜான்சன். தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகன் கவனிக்க இந்த ‘அல்டி’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் எம்.ஜே.உசேன்.

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோருக்குக் கிடைக்கிறது. அந்த போனில் இருக்கும் ஒரு வீடியோவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.மகனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்குமான பிரச்னை குறித்த முக்கிய தகவல் இருக்கிறது. இந்த வீடியோவால் இதில் தொடர்புள்ளவர்களின் வாழ்க்கை எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதை திகில் கலந்து சொல்லும் விறுவிறுப்பான திரைப்படம்தான் இந்த ‘அல்டி’.

முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக அளித்துள்ளார். மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக ‘அல்டி’ வந்துள்ளது.

அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் .நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.