ஆரோக்கிய சிவகுமார்!

இன்றைய காலகட்டத்தில் கோவிட்19 வைரஸ் கிருமிகளை விட வதந்தி பரப்புபவர்கள்தான் கொடுமையான கிருமிகள்.
நடிகர் சிவகுமார் கொரோனா சோதனை செய்துகொண்டுள்ளார். முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.


அவர் எப்போதும் உடல் நலத்தை கவனித்துக் கொள்பவர்.
அவரை கொரோனா கிருமிகள் அண்டாது. வதந்திகள் பரப்பும் இந்த மனிதவிஷக் கிருமிகள்தான் அவரை சுற்றிச் சுற்றி வருகின்றன.
அவர் இப்படிப்பட்ட மனிதக் கிருமிகளிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமுதாயத்திற்காக மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கிருமிகள் அவரைப் பற்றித்தவறான தகவல்களைப் பரப்புகின்றன .அந்த மனித வைரஸ்களிடமிருந்து தப்பிக்க எந்த கிருமிநாசினியும் இல்லை .அவர்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மனிதக்கிருமிகள் அறிந்து கொள்ளவே என்றும் மார்கண்டேயனான 79 வயது ஆரோக்கிய சிவகுமார் இன்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.