‘காலங்களில் அவள் வசந்தம்’ விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் வந்துள்ள காதல் படம் “காலங்களில் அவள் வசந்தம்”. ராகவ் மிதார்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகன் கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி நடித்துள்ளார்கள்.
சினிமாவில் தாக்கத்திற்கு ஆளான நாயகன் ஷியாம் (கெளசிக்),
பார்க்கும் சினிமாக்களே வாழ்க்கை என நினைத்து வாழ்பவர். பெண்களைக் காதலிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டவர் . இவரை பார்த்தவுடன் ராதேக்கு(அஞ்சலி ) காதல் வருகிறது. திருமணத்திற்குப் பின்பு ஷியாமின் பழைய காதல் தெரிய வருகிறது. இருவருக்குள் பிரச்சினை எழுகிறது. விவாகரத்து வரை செல்கிறார்கள். இறுதியில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்களா? என்பதே கதை முடிவு.

செயற்கையான பரபரப்புகள் திடீர் திருப்பங்கள் என்று எதுவும் இல்லை என்றாலும் உணர்வுகளின் தொகுப்பாகக் காட்சிகளை வைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

படத்தின் குறைவான நீளம் இப்படத்திற்கு ஒரு பலமாக இருக்கிறது. கௌசிக் பல காட்சிகளிலும் ஒரே போன்று முகபாவனைகளைக் காட்டுகிறார். நடிப்பில் மேலும் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும்.
கண்களில் கவர்ச்சி, சோகம், பிரிவு, காதல் என பலவித உணர்வுகளைக் காட்டியிருக்கிறார் அஞ்சலி நாயர். குடும்பப் பாங்கான தோற்றம் இவருக்கு கை கொடுக்கும்.

ஹரிஷ்.ஆர். இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளன. “பாசிட்டிவ் மட்டும் பார்ப்பது காதல் இல்லை. நெகட்டிவையும் ஏற்றுக்கொள்வதும் காதல் தான்” என்ற வசனங்கள் சம காலக் காதலைச் சொல்கிறது. நல்ல கதையில் திரைக்கதை நன்றாக இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். ‘காலங்களில் அவள் வசந்தம்’ உணர்வுகளைச் சொன்ன காதல் கதை.