‘க்ளாஸ் மேட்ஸ்’ விமர்சனம்

அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டி.எம். கார்த்திக், சாம்ஸ், எம்.பி. முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் குட்டிப்புலி ஷரவண சக்தி.ஒளிப்பதிவு அருண்குமார் செல்வராஜ்,
இசையமைப்பாளர் .பிரிதிவி,படத்தொகுப்பு எம்.எஸ்.செல்வம். முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்துளார்.

கிளாஸ்மேட்ஸ் ( Class mates) என்பது ஒரு வகுப்புத் தோழர்களைக் குறிக்கும் சொல். இந்த க்ளாஸ்மேட் ஸ் ( Glass mates) படம் ஒன்றாகக் குடிக்கும் சக குடியர்களைப் பற்றியது.

தயாரிப்பாளர் முகவைக்காரர். அதனால் தென் தமிழ் நாட்டின் இராமநாதபுரத்தின் பின்னணியில் கதை தொடங்குகிறது. பாம்பன் பாலம், ஏர்வாடி தர்கா, உத்திரகோசமங்கை கோவில், கமல்ஹாசன், அப்துல் கலாம் என இராமநாதபுரத்தின் பெருமைகளைக் கூறி படத்தைத் தொடங்குகிறார்கள்.

கால் டாக்சி டிரைவர் அங்கையற்கண்ணனும் குட்டிப்புலி  ஷரவணசக்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் குடிக்கு அடிமையான மொடா குடியர்கள் .

அங்கையற்கண்ணன் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர். அழகான மனைவி அன்பான கணவன் என்று இருந்தாலும் குடிப்பழக்கம் அவரைத் துரத்துகிறது.சம்பாதிக்கும் பணம் நண்பன் ஷரவணசக்தியுடன் சேர்ந்து குடித்து அழிகிறது.

ஆசிரியை மனைவி ,பாசம் உள்ள மகள் என்று ஷரவண சக்தி இருந்தாலும் அவரையும் குடிப்பழக்கம் பீடித்துள்ளது. குடிப்பழக்கம் எல்லா தீய பழக்கங்களுக்கும் தாய் என்பதால் குடும்பத்தில் நிம்மதி குலைகிறது. இருவரும் தங்கள் மனைவியைச் சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள் சந்தேகக்கோடு சந்தோஷக் கேடாக மாறுகிறது.

முன்னாள் குடிகாரர் ஆன மயில்சாமி ஊரில் குடிப்பதை நிறுத்தி விட்டவர். மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் மகள் அபி நட்சத்ரா என்ற அமைதியாக வாழ விரும்புகிறார்.இந்த இரண்டு மொடா குடியர்களும் அவரது குடும்பத்தில் நுழைந்து குழப்பம் மூட்டுகிறார்கள். இந்நிலையில் துபாயில் இருந்து வரும் ஷரவணசக்தி மைத்துனர் ஷாம்ஸ் க்கு பெண் பார்த்து திருமணம் ஏற்பாடு நடக்கிறது.  திருமணத்துக்கு முதல் நாள் ஷாம்ஸ் குடித்துவிட்டு கெட்ட ஆட்டம் போட, அவரது வீடியோ வெளியே பரவி, திருமணம் நின்று போகிறது.குடித்துவிட்டு ஷரவணசக்தி, அங்கையற் கண்ணன் மற்றும் மயில்சாமி ஆகிய மூவரும் போதையில் காரில் போகும்போது கார் மரத்தில் மோதி  மயில்சாமி  மரணம் அடைகிறார். இதனால்,அவரது குடும்பம் நிர்க்தியாகிறது.அத்துடன் அங்கையற்கண்ணன் ,ஷரவணசக்தி குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

அங்கையற் கண்ணன் படத்தைத் தயாரித்து இருப்பதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.பொதுவாக இப்படித் தயாரிப்பாளர் என்று இருப்பவர்கள் தங்கள் ஆசைக்காக நடிக்கும் போது அவர்களின் நடிப்பு சொல்லிக் கொள்வது போல் இருக்காது ஆனால் அங்கையற் கண்ணன் அந்தப் பாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தின் இயக்குநரும், இரண்டாம் நாயகனாவும் வரும் ஷரவண சக்தி,பல படங்கள் நகைச்சுவைப் பாத்திரங்களில் வந்தவர் இதில் குடிகாரராக வந்து தன் நடிப்பைக் காட்டியுள்ளார்.வழக்கம்போல மிகை நடிப்பு எட்டிப் பார்க்கிறது.
பிராணா, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அருண்குமார் செல்வராஜ் இயக்குநர் விரும்பிய வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் பிரிதிவி யின் இசையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

படங்களில் குடிப்பழக்கத்தை அத்தியாசிய வழக்கம் போல் சகஜமாக்கி உள்ளனர். குடியின் கொடிய விளைவுகளைச் சொல்லும் கதையில் சினிமாவுக்கான வணிக அம்சங்களைச் சேர்த்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி சில மிகை நடிப்புத் தருணங்களை தவிர்த்து இருந்தால் இருந்தால் அழுத்தமான ஒரு படமாக மாறி இருக்கும்.