‘க.க.க.போ ‘ படத்தின் கதை பவர் ஸ்டார் சொந்தக் கதையா?

power
இன்று காலை கமலா திரை அரங்கில்”க.க.க.போ” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடை பெற்றது. இதன் ஆடியோவை   அன்பு பிக்சர்ஸ் ஜெ. அன்பழகன் வெளியீட க.க.க.போ படத்தின் தயாரிப்பாளர் செல்வி சங்கர் உள்ளிட்ட க க க போ படக்குழுவினர் பெற்றுகொண்டனர்.
இவ்விழாவில் அன்பு பிக்சர்ஸ் அன்பழகன், பஞ்சு சுப்பு ,பவர் ஸ்டார், ஆதவன், சாக்க்ஷி அகர்வால், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் இசைமைப்பாளர்கள் பி.சி. சிவம், சி. வி. அமரா, இயக்குநர் கேபிள் சங்கர், விஜய் ஆதிராஜ்,  உள்ளிட்ட ஏராளமான  திரை நட்சத்திரங்களுடன் இப்படத்தை வெளியிடும் தேவர் பிலிம்ஸ்-ன் சி.எ. பாரதி ஐய்யப்பன் கலந்து கொண்டார்.
இப்படத்தை பற்றி பஞ்சு சுப்பு கூறியதாவது,
”இப்படத்திற்காக நான் பெண் வேடத்தில் நடிபதர்காக மீசை மட்டுமல்லாது கண் புருவத்தையும் மழித்துக்கொண்டு ஒரு வாரமாக வெளியே செல்லமுடியாமல் தவித்தேன் ஆனாலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதை ஏற்று  நடித்தேன். உண்மையாகவே இது மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ”
பவர் ஸ்டார் கூறியதாவது,
இப்படத்தில் எனக்காகவே ஒரு பாடல் காட்சி கொடுக்கப்பட்டது அது எனது நிஜ கேரக்டரைச்  சொல்லும் விதமாக இருந்தது. எனக்கு இந்த படத்தில் நடித்த காட்சிகளும் கோர்ட் ஐ மையப்படுத்தியே அமைந்தது, உண்மையில் என் நிஜ வாழ்க்கைக்கும் கோர்ட்டுக்கும் சம்மந்தம் இருந்தது, அதே போல் இந்த காட்சி மூன்று பெண்களுக்கு கணவன் என்று, என் நிஜ வாழெக்கையோடு நினைவு செய்து விட்டார் இயக்குநர் ”என்று பவர் ஸ்டார் கல கலப்பாக பேசினார்.
kakapo-ad - Copyஇயக்குநர் பி .எஸ். விஜய்  கூறியதாவது,
”இப்படம் உணம்யிலையே நிறைய முன்னணி  நட்சத்திரங்களை வைத்து  படமாக்கினேன். அவர்கள் அனைவரும் என்னை  புதுமுக  இயக்குநர் என்று கூட பார்க்காமல் என்னுடன்  அன்பாக நடந்துகொண்டார்கள் அவர்கள்  அனைவருக்கும் நன்றி. இப்படத்தை தயாரித்த செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கு  மிகவும் நன்றி  மேலும் கதாநாயகி  இணை இயக்குநர் போல் பணியாற்றினார் எனவும்  இப்படத்தை வெளியிடும் தேவர் பிக்சர்ஸ்க்கு நன்றி”
தயாரிப்பாளர் சங்கர் கூறியதாவது,
”நான் மலேசியாவில் இருந்து வந்த தமிழன் என்கிறார்கள்   ஆனால் நான் திருநெல்வேலியில் இருந்து மலேசியா சென்ற தமிழன் என்றும் நான் இப்படத்தை  என் மனைவி செல்விக்காக தயாரித்தேன்.என்னை இப்படத்திற்கு கொண்டுவந்தவர் இயக்குனர் விஜய்தான் என்றும், நான் தயாரிப்பாளன் என்ற முறையில் அவருக்கு அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன் அவரும் இப்படத்தை நன்றாக முடித்து கொடுத்தார். இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் குழுமத்திற்கு மிகவும் நன்றி ” என்றவர்,  இதுபோன்று தமிழில் நிறைய திரைப்படங்களை தயாரிக்க போவதாகவும் கூறினார். என்று கூறினார்.
    அன்பழகன் கூறியதாவது.
”இது போன்று சிறிய படங்கள் நிறைய வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். அன்பு பிக்சர்ஸ் ஐயப்பன் அவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நீண்டகால நண்பர், சிலவருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வந்த தலைவா படம் அன்று வெளிவர முடியாமால் சிக்கலில் இருந்தது. அப்பொழுது நானும் ஐயப்பன்  அவர்களும் இப்படத்தை வாங்கி 300 திரை அரங்களில் வெளியிட்டோம். இது போன்று பெரிய படங்களே வெளிவர முடியாமல் இருக்கும்பொழுது சிறிய படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றன. எனவே நான் நிறைய சிறிய படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறினார்.