சடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது !

மகேஷ் பட்டின் எழுத்து, இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’சடக்-2’. இந்தத் திரைப்படம் 1991ஆம் ஆண்டு சஞ்சய் தத் மற்றும் பூஜா பட் நடிப்பில் வெளிவந்த ’சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்த ’சடக்’ திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து சடக்-2 வெளியாகிறது.

ஆலியா பட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், பூஜா பட், ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் க்ரொவர், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை மகேஷ் பட் & முகேஷ் பட்டின் விஷ்வேஸ் பிலிம்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூயோஸ் இணைந்து  தயாரித்திருக்கிறது.

 #Sadak2Trailer  Watch: https://youtu.be/-U5EWezaQos