சென்னைவாழ் பிரம்மாச்சாரிகளின் கதை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’

chennai-ungalai1‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ இச் சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் உள்ளனர் .எனினும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர். ‘Bachelors’ என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் தான்“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது”

கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ATM ப்ரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ” படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன். பாபிசிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படம் சென்னையின் பலபகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சிலகி ராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

“ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கைப் புண்ணாக்கிக் கொண்டு, அடிகதவு இல்லாத கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவுகாணும் சென்னையில் வாழநினைக்கும் பேட்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்தத் திரைப்படம். 2015 ஆம்ஆண்டு ஜனவரிஇறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுஉள்ளோம்” எனக்கூறுகிறார் இயக்குநர் மருதுபாண்டியன்.