படவிழாவில் பாரதியார் கதை சொன்ன கரு. பழனியப்பன் !

movie-funding-karuகரு. பழனியப்பன் என்றாலே கருத்து பழனியப்பன் என்று சொல்லும்படி அவர் பேச்சு இருக்கும்.

மூவி பண்டிங் நெட்ஒர்க் வெற்றி சந்திப்பில் கருபழனியப்பன் அப்படித்தான் பேசினார்.

க்ரவுட்ஃபண்டிங் என்கிற முறையில்  இரண்டு படங்களைத் தயாரிப்பதற்காக நிதிஆதாரத்தை திரட்டி இயக்குநர்கள்  ஜெய்லானியும் முத்துராமலிங்கனும் சாதனை படைத்துள்ளார்கள் .

மூவிஃபண்டிங் எனும் நிறுவனத்தை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பித்து, கு றுகிய கால இலக்குடன்  இரண்டு படங்கள் தயாரிப்பதற்குத் தேவையான நிதி சேர்ந்த வெற்றிச் செய்தியைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த சக்சஸ்மீட்டில் இயக்குநர்கள் ‘கரு.பழனியப்பன்’, ‘மீராகதிரவன்’ மற்றும் ‘தமிழன்தொலைக்காட்சி’ நிறுவனரும், ‘சினேகாவின் Movie Funding Network Success Meet Stills (11) காதலர்கள்’ படத் தயாரிப்பாளருமான கா.கலைக்கோட்டுதயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.

விழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசினார்,

‘’க்ரவுட்ஃபண்டிங்’ முறையைஆரம்பித்து வைத்ததே பாரதியார்தான். 1928-ல்அவர் தன் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான்ஒருபுத்தகம் கொண்டு வரப்போறேன். அதுக்கு இருபதாயிரம் ருபாய் தேவைப்படுது. என்னோடநண்பர்கள்ஆளுக்கு 1௦௦ரூபாய் கொடுத்து உதவினால் அவர்களுக்கு நான் வட்டியோடு திருப்பிச் செலுத்திவிடுவேன் அப்படின்னு சொல்லியிருக்கார். காலணா, அரையணா வட்டிக்குக் கடன்கொடுத்துட்டு இருந்த காலத்திலேயே இரண்டுபைசா  வட்டி தருகிறேன் என்றுஅதில்குறிப்பிட்டிருந்தார்’’ என்று  வரலாற்றை நினைவூட்டினார்.,

”இந்த மாதிரி ஒருவிஷயத்த ஆரம்பிக்கும் போது நாம அமைதியா இருந்தாலே போதும். அது நல்லபடியா நடக்கும். அதுக்கும்பாரதியாரே, ‘’நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதிகுறைந்தவர் காசுகள்தாரீர். அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்’’ அப்படின்னு சொல்லிருக்கார். அதையே தான் நானும் இங்க எல்லோருக்கும் சொல்றேன். ஒரு நல்லமுயற்சிக்கு நாம் பணஉதவி செய்யாவிட்டாலும் அமைதியாக இருந்தாலேபோதும். இந்த முயற்சிக்கு நாம்பெரிதும் துணைபுரியணும்’’ என்றார்.

‘சினேகாவின்காதலர்கள்’ படம் மூலம் ஒரு வெற்றிப்படத்தைத் தயாரிப்பது எப்படி..? என்று தான் கண்டுகொண்டதாகக் கூறிய கா.கலைக்கோட்டுதயம்,  சினிமாவில் விட்ட பணத்தை சினிமாவில்தான் எடுக்க வேண்டும் என்றும் அடுத்து ஜெய்லானியை இயக்குநராகவும், நமீதாவைக் கதாநாயகியாகவும் வைத்து ஒருபடத்தை  இயக்கவிருப்பதாகவும் அறிவித்தார்.

முன்னதாக Movie Funding Network Success Meet Stills (9)மூவி பண்டிங் நெட்ஒர்க் பற்றி ஜெய்லானி விளக்கினார். முத்துராமலிங்கன் தன் அனுபவத்தைக் கூறினார். முதலீட்டாளர்களும் பேசினர்.

நாமும் இந்தமுயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவோமே..!