பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு

சென்னையில் தமிழிசைச் vaira-okசங்கத்தின் 73ஆம்ஆண்டுவிழாராஜாஅண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது. தமிழிசைச்சங்கத் தலைவர் நீதிபதிபு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசைச்சங்க மதிப்பியல் செயலர் தொழிலதிபர் .சி.முத்தையா, முனைவர் தேவகிமுத்தையா கலந்துகொண்டஇவ்விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமையேற்று விருதுகள் வழங்கிப் பேசியதாவது:

73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டதமிழிசைச்சங்கத்தின் பெருமையைப் புதியதலைமுறை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழின்விழுமியங்கள்விளங்கும்.

தமிழர்கள் இடைக்காலத்தில் அரசு இழந்தார்கள்; நாடு இழந்தார்கள்; கலைஇழந்தார்கள்; மொழி இழந்தார்கள் பாரம்பரியம் இழந்தார்கள். இழந்தவற்றை மீட்டெடுக்கத்தான் திராவிடஇயக்கங்கள் தோன்றின.

தமிழிசையை மீட்டெடுக்கும் பெரும்பணியை ராஜாசர்அண்ணாமலைச்செட்டியார்ஆற்றினார். புனல்கொண்ட பூம்புகாரை மீட்டெடுக்க முடியவில்லை; அனல் கொண்ட மதுரையை மீட்டெடுக்க முடியவில்லை; மணல் கொண்ட வஞ்சியை மீட்டெடுக்கத் தெரியவில்லை. ஆனால் செட்டிநாட்டு அரசர்குடும்பம் தமிழிசையை மீட்டெடுத்தது.

அறிஞர் அண்ணா ஒருமுறை செட்டிநாட்டுக்குச் சென்றிருந்தார். “சென்னையிலிருந்து வருகிறேன். செட்டிநாட்டுக்கு வந்திருக்கிறேன். சென்னைக்கும் செட்டிநாட்டுக்கும் ஒருவேறுபாடு பார்க்கிறேன். சென்னையில் வீடுகள் இல்லாத மனிதர்கள். செட்டிநாட்டில் மனிதர்கள் இல்லாதவீடுகள்என்று அண்ணா பேசினார். ஆனால் மனிதர்கள் இல்லாதஅந்த வீட்டில் கலை குடியிருந்தது; மொழி குடியிருந்தது; பண்பாடு குடியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் அண்ணாமலை அரசர் ஈட்டிய பொருளால் இசைச்சங்கம் தொடங்கி வைத்தார்.

தமிழிசை என்று ஒன்று இருக்கிறதா? தமிழில் பாடுவதற்கு என்ன உள்ளது? என்று கேட்டகேள்விக்கு தமிழிசைச்சங்கம் வரலாற்று அடிப்படையில் பதில்சொன்னது.

சுரங்கள் ஏழும் வடமொழி சார்ந்ததல்ல. தமிழுக்கென்று தனிப்பண்கள் இருந்தன. குரல்துத்தம்கைக்கிளைஉழைஇளிவிளரிதாரம் என்ற தமிழ்ப்பண்களே சரிகமபதநிஸ என்று பின்னாளில் சொல்லப்பட்டன. குழல்யாழ்முழவு என்ற இசைக்கருவிகளே தனித்தமிழ்க்கருவிகள் என்பதற்கு அந்தச் சொற்களில் ஆளப்படும்கரமேசாட்சி.

உடுக்கையில் உள்ள தோல் மாட்டுப்பெருங்குடல் சவ்வினால் செய்யப்பட்டது. ஆதித்தமிழன்தான்அந்தக் கருவியைக் கண்டுபிடித்திருக்கவேண்டும்.

தமிழிசை என்பது மேட்டுக்குடிக்கு மட்டும் ஆனதல்ல. ஆராய்ச்சியாளர்களுக்கும் வித்தகர்களுக்கும் மட்டும்உரியதல்ல. உழைக்கும் மக்களைச் சாராத எதுவும் நிலைபெறுவதில்லை. இதைத்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பேபஞ்சமம்என்பதும் சட்ஜமம் என்பதும் பஞ்சப்பரம்பரைக்கு அப்பறந்தான்என்று சிந்துபைரவியில் எழுதினேன்.

இன்று இசைப்பேரறிஞர் விருதுபெறும் அரித்துவாரமங்கலம் .கே.பழனிவேல்தவிலில்இசைவாசிக்கிறவர்அல்ல; தவிலில்தமிழ்வாசிக்கிறவர். பண்இசைப்பேரறிஞர் விருது பெறும் வேதாரண்யம் சு.முத்துக்குமாரசாமிதேசிகர் உலகமெல்லாம் தேவாரம் ஓதுகிறவர். நூற்றுக்கணக்கான ஓதுவார்களை உருவாக்கியிருப்பவர். ஓதுவார்கள் மட்டும் இல்லையென்றால் தமிழ் 7ஆம்நூற்றாண்டிலிருந்து  19ஆம்நூற்றாண்டுக்குப் பயணப்பட்டிருக்காது. இரண்டு அறிஞர்களுக்கும் எங்கள்வாழ்த்துக்கள்.

சமூகவலைத்தளங்களில் உலவும் கணிப்பொறித்தலைமுறை நம்பாரம்பரியப்பெருமைகளையும், கலைமதிப்புகளையும் கண்டறியவேண்டும். அப்போதுதான் புதியநூற்றாண்டுகளில் நாம்பெருமிதத்தோடு முன்னேறமுடியும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒருகலையும் ஒருகைத்தொழிலும் கட்டாயப்பாடமாக்கப்படவேண்டும்.