‘மார்க் ஆண்டனி’ விமர்சனம்

காலச்சக்கரத்தை முன் பின் நகர்த்துவது என்கிற டைம் ட்ராவல் எனப்படும் காலப்பயணத்தை முன்னிட்டு ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வருகின்றன.மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் இந்த முயற்சிகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படி உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி.ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அநாயாசமான கதை சொல்லலில் உருவாகி இருக்கும் கேங்ஸ்டர் கதை தான் இது.

தந்தை பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். மகன் மெக்கானிக் ஆக உள்ளார். இப்படி தந்தை மகன் என இரண்டு பாத்திரங்களிலுமே விஷால் நடித்துள்ளார். இந்த இரண்டு பாத்திரங்களுக்கும் நட்பாகவும் விரோதியாக இருக்கும் வில்லன் தான் எஸ். ஜே .சூர்யா .அவருக்கும் நேர்நிலை எதிர்மறை என இரண்டு வேடங்கள்.மகன் விஷாலுக்கு தன் தந்தை நல்லவரா கெட்டவரா? என்று தெரியாது .அவரை கொன்றது யார் ?அம்மாவைக் கொன்றது யார் ?அது அப்பா தானா? என்று பல கேள்விகள் எழுகின்றன. விஞ்ஞானி செல்வராகவன் கண்டுபிடித்த ஒரு வினோதமான கடிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குப் காலப்பயணம் செய்கிறார் விஷால். அதன் மூலம் தன் கேள்விகளுக்குப் பதில் தேட முயற்சி செய்கிறார் .அவர் விடைகளைக் கண்டுபிடித்தாரா? என்பது தான் கதை.

பட உருவாக்கத்தில் தமிழோடு தெலுங்கு வாசனை மேலோங்கி உள்ளது. நடிகர் சுனில் கலகலப்பாக கலக்கியுள்ளார். கலகலப்பு காட்டி விஷால் ரசிகர்களைக் கவர நகைச்சுவைப் பகுதியையும் எடுத்துக்கொண்டு ஈடு செய்கிறார். செல்வராகவனுக்கு சிறிய வாய்ப்பு தான் என்றாலும் நினைவில் பதிகிறார். கதாநாயகிகள் ரித்து வர்மா, அபிநயா இருவரும் சுமார் ரகம். ஜிவி பிரகாஷ் இசையும் படத்தோடு பயணிக்கிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்தக் கதையை ஆழமாக யோசித்து செய்திருந்தால் மேலும் வலுப்பெற்று இருக்கும்.

பொழுதுபோக்கு நோக்கிலேயே இந்தப் படத்தை எடுத்து அதை போரடிக்காமல் கொடுத்துள்ளார். லாஜிக் மறந்து மார்க் ஆண்டனியை ரசிக்கலாம்