வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்“வீரா”

நேற்று வெளியான வீரா திரைபடத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள். இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது.

படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான ஓன்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்திற்கு பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கும். படத்தில் வரகூடிய நகைசுவை காட்சியையோ அல்லது சண்டை காட்சியையோ மாற்றியமைக்க கூடிய ஓன்று தான் பின்னணி இசை. உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றியமைக்கலாம். படத்திற்கு பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது.

இந்த படத்தில் ரெட்ரோ வரிசையில் இசை வருவது போன்று முயற்சி செய்துள்ளோம் ஒரு புது முயற்சி. ஒரு இசைமைப்பாளருக்கு முழு படத்திற்கும் அல்லது பின்னணி இசையமைப்பதும் மிக முக்கியம். படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்திற்கு மிக முக்கியமாக காரணங்கள் இருக்கும் போது கண்டிப்பாக இசையமைப்பேன். இப்படத்தில் வட சென்னையில் வாழ கூடிய மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

இந்த மாதிரியான படங்களை அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கும் பட்சத்தில் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் படத்தில் தேவையான இடங்களில் தான் நகைச்சுவை , சண்டை காட்சிகள் அமைந்துள்ளது. தேவையில்லாமல் திணிப்பது போன்ற காட்சிகள் இல்லை. மிக சிறப்ப்பாக வந்துள்ளது. அடுத்த படமான “காட்டேரி” திரைப்படம் முந்திய படமான “யாமிருக்க பயமே” படத்தை விட மிகுந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மீண்டும் அதே படக்குழுவுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. “யாமிருக்க பயமே” , “காட்டேரி” திரைபடத்தின் டைரக்டர் என்னுடைய முதல் விளம்பர வீடியோவில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அதையும் தாண்டி நாங்கள் நல்ல நண்பர்கள்.

  “காட்டேரி” இந்த வருடத்தின் பாதியில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதை தவிர்த்து இன்னும் 2 திட்டங்கள் உள்ளன. Independent Music-ல் அதிக ஆர்வம் உள்ளது திட்டங்களும் உள்ளது. தற்போது நிறைய பாடல்கள் வருகின்றாக மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சரியான தருணத்தில் கண்டிப்பாக பண்ணலாம்.