சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர்.. கீர்த்தன் நடா கெளடா இயக்கியுள்ளார். வெங்கி ஜிஜி இசையமைத்துள்ளார் .உல்லாஸ் ஹைதூர் பட வடிவமைப்பு செய்துள்ளார்.
பிரஷாந்த் நீல் வழங்கும் இந்தப் படத்தை ரவிசங்கர் யலமஞ்சிலி, நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.இந்த ‘418’ திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பின்னணியில் உருவாகி இருக்கும் அனானுஷ்ய திரில்லர் திரைப்படம் இது.விம்ஸ் (VIMS) எனப்படும் வேதகிரி மருத்துவக் கல்லூரியில் அது ஒரு ஆண்கள் தங்கும் விடுதி அங்கே பெண்களுக்கு அனுமதி இல்லை .அங்கே தங்கி இருக்கும் மாணவர்களின் பெற்றோரைக் கூட அனுமதிக்காமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விடுதியில் நான்காவது மாடியில் அறை எண்418க்குள் யாரையும் செல்லக்கூடாது, அந்த அறையை எக்காரணத்தை முன்னிட்டும் திறக்க கூடாது என்று விடுதி நிர்வாகம் கூறுகிறது. அங்கு ஏதோ ஓர் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும் அறையைத் திறந்தால் ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
பக்கத்து அறை என் 417 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள்.இங்கிருக்கும் ஒரு மாணவன் விவேக்கிற்கு கெட்ட கனவுகள் வருகின்றன.கனவுகள் என்றால் சாதாரண கனவுகள் இல்லை, நெருங்கியவர்கள் கொலை செய்யப்படுவது போலும், தான் பெரிய ஆபத்தில் இருப்பது போலவும் கனவு வருகிறது.அவன் அதை உண்மை என்று நம்புகிறான்.அந்த அறையில் இனியும் இருக்க மாட்டேன் என்று தனியே சென்று விடுகிறான். இருந்தாலும் அந்த அச்சம் அவனைத் துரத்துகிறது.ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரைப் பார்க்கச் செல்கிறார்கள். அங்கே மருத்துவர் அவனிடம் துருவித் துருவிக் கேள்வி கேட்கிறார். அதற்குக் காரணம் என்னவென்று ஒரு முன் கதை சொல்லப்படுகிறது. அதன்படி தேவகி என்று யட்ச கானம் கூத்துக் கலைக்குழுவில் நடனமாடும் கலைஞராக இருக்கும் ஒரு பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. அந்தப் பெண் கூத்துக் கலையை விட்டு எதிர்ப்புகள் மத்தியில் ஒரு கௌரவமான குடும்பத்து வாலிபனை காதலித்து கைப்பிடிக்கிறாள். அவளுக்குக் குழந்தை இல்லாமல் பல அவமானங்களைச் சந்திக்கிறாள்.நீண்ட நாட்களுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கிறாள் அந்த கர்ப்பம் நிலைக்க வேண்டும் என்றால் ஆறு கொலைகளைச் செய்ய வேண்டும் என்று தேவி என்கிற தெய்வத்தின் உபாசகன் கூறுகிறான். தன் தாய்மை கனவு நிறைவேறுவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல அவள் தயாராக இருக்கிறாள்.அதன்படி ஒவ்வொரு கொலையாகச் செய்ய ஆரம்பிக்கிறாள். 
அந்த 418 ஆம் எண் அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று மலர் சொல்லியும் கேட்காமல் சாயிஷா என்ற மாணவி உள்ளிட்ட சிலர் அதைத் திறந்து பார்க்கப் புறப்படுகிறார்கள். அவர்கள் முயற்சியில் அந்த அமானுஷ்ய சக்தியில் சிக்கிக் கொள்கிறார்கள் முடிவு என்ன என்பதுதான் 148.30 நிமிடங்கள் கொண்ட 418 படத்தின் மீதிக் கதை.
படம் தொடங்கியதுமே 418 ஆம் எண்ணுக்கு அருகில்இருக்கும் 417 ஆம் அறையில் இருக்கும் விவேக் என்கிற மாணவனுக்கு சில அசாதாரணமான கனவுகள் வருகின்றன . அவன் பயந்து அலறுவது மிரள்வது என்று அவனது கோணத்தில் கதை நகர ஆரம்பிக்கிறது. அவன் பயந்து அலறுவது பரிதாபத்தை அள்ளுகிறது.பிறகு தான் அதன் தீவிரத்தை அருகில் உள்ளவர்கள் உணர்கிறார்கள்.மனநல மருத்துவரிடம் சென்ற பிறகு கதை வேறொரு திசையில் பயணிக்கிறது.அதிர்ச்சிகரமான முன்கதை விரிய ஆரம்பிக்கிறது.அதில் வரும் யட்சகானம் அத்தியாயம் படத்திற்குள் இன்னொரு கதை போல செல்கிறது.அதில் தேவகி தேவிகாவாக மாற ஆரம்பித்து கொலைவெறியோடு கொல்ல ஆரம்பித்த பிறகு அதில் பரபரப்பு தொற்றிக் கொண்டு கிளைமாக்ஸ் நோக்கிச் செல்கிறது கதை.அதற்குப் பிறகு நடக்கும் அமானுஷ்ய ஆட்டங்கள் பார்ப்பவரைப் பயமுறுத்துபவை.
இந்தப் படத்தில் தேவகியாக வந்து யட்சகானம் எனப்படும் ஆத்மாவின் ராகம் பாடும் கலைஞராக சைத்ரா வருகிறார்.தேவகியாக இருந்தவர், தேவிகாவாக உருமாறியதுடன் பார்வையாளர்களின் கவனத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டு வருகிறார்.ஒரு கூத்க்து கலைஞராக நடனமாடி குடும்பத் தலைவியாக வந்த பிறகு அந்த தாய்மையின் ஏக்கத்தைப் பிரதிபலித்து ஒரு பக்கம் அனுதாபத்தை அள்ளினாலும் பிறகு தனது தாய்மையைக் காப்பாற்றப் புறப்பட்டு அவர் விஸ்வரூபம் எடுத்து ஆடும் உயிர்ப்பலி ஆட்டம் பார்ப்பவரை அச்சமூட்டும்.முதலில் ரம்யாவைக் கொலை செய்யும் போது திரையரங்கு அதிரும். அவ்வகையில் இந்தப் படத்தில் படத்தின் பிரதான பாத்திரம் மேற்றுள்ள சைத்ரா ஆச்சார் படத்தின் கதையைத் தன் தோளில் சுமந்து நிற்கிறார்.
இந்தப் படத்தில் விவேக் பாத்திரத்தில் வரும் இளைஞர் நடிகர் தனதுஉச்ச உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.விவேக் நண்பராக ரோஹித் பாத்திரத்தில் வருபவரும் யதார்த்தமாக நடித்துள்ளார்.அமைதியாக வரும் சற்று எடை கூடிய நடிகரும் நெருக்கடிக்குள்ளும் சிரிக்க வைக்கிறார். சாயிஷாவாக வரும் இளம்பெண் ஆரம்பத்தில் தைரியத்திற்கு உதாரணமாகவும் பிறகு அமானுஷ்யத்துக்குள் சிக்கிக் கொள்பவராகவும் கவனிக்க வைக்கிறார்.மனநல மருத்துவராக வருபவரும் தோற்றத்திலும் குரலிலும் நம்மை மனதில் ஆழமாக ஊடுருகிறார்.கண்டிப்பான வாட்ச்மேன் ஆக வரும் காவலாளி கூட பதிகிறார்.
அமானுஷ்ய ரகத்தில் கதை கொண்ட இந்த திரில்லர் படத்துக்கு ஏற்ற வ கையில் இருளும் ஒளியும் கலந்த ஒளிப்பதிவைச் சரியாகவே ஒளிப்பதிவாளர் செய்துள்ளார். கதையின பெரும்பகுதி இருட்டில் நடப்பதால் காட்சிகள் மிரட்டுகின்றன.
படத்தில் ஒலியமைப்பு இன்னொரு பக்கம் நின்று நம்மை அச்சமூட்டுகிறது.அதற்கேற்ற வெங்கியின் பின்னணி இசை வேறு பீதி கொள்ள வைக்கும்.
ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கு ஆறு கொலைகளைச் செய்ய முயலும் ஒரு பெண்ணின் கதை என்பது ஒரு நீதியற்ற நியாயமற்ற அறமற்ற செயல் தான். இந்தப் போங்காட்டத்தை மூடநம்பிக்கை காரணமாக வைத்து மன்னிக்க முடியுமா? முடியாதுதான் என்றாலும் இதை ஒரு கற்பனையாக நினைத்துத்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
அமானுஷ்ய சக்தி கதை கொண்ட படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த ’418’ படம் பிடிக்கும்.


